வேலணை பிரதேச செயலகம் கால்பந்தாட்டத்தில் சம்பியன்

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் வேலணை பிர­தேச செய­லக அணி கிண்­ணம் வென்­றது.

ஊர்­கா­வற்றுறை சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழகமைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கர­வெட்டி பிர­தேச செய­லக அணி­யும், வேலணை பிர­தேச செய­லக அணி­யும் மோதின. 1:1 என்ற கோல் கணக்­கில் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி.

இரண்­டா­வது பாதி­யில் ஆதிக்­கம் செலுத்­திய வேலணை பிர­தேச செய­லக அணி 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.

You might also like