சிவப்பு அரிசி கொழுக்கட்டை

தேவையானவை

சிவப்பு பச்சரிசி – 1 பெரிய கப்
பொடித்த வெல்லம் – 300 கிராம்
ஏலத்தூள் – சிறிது
கொதித்த நீர் – 1 கப்
தேங்காய் – 1/2 மூடி

செய்முறை

அரிசியை ஊற வைத்து உலர்த்தி மிஷினில் அரைத்து சலித்து இந்த மாவைத் தேவையான கொதிநீரில் போட்டுக் கிளற வேண்டும்.

நீரில் வெல்லத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் வடித்து, ஏலத்தூள், தேங்காய்த்துருவல் போட்டு மா சேர்த்து கிளறி பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து படைத்து பரிமாறவும்.

 

You might also like