பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் உதவித் திட்டங்கள் வழங்கல்

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் கிழக்கு மாகாண முன்னாள்முதலமைச்சரின் இந்த ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விளையாட்டுக்கழகத்துக்கான உபகரணங்கள்,ஒலிபெருக்கி, கணனி உபகரணங்கள், மீனவர் சங்கத்திற்கு வலைகள், தளபாடங்கள் என்பன வழங்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.அன்வர், எஸ்.அஹமட், மட்டக்களப்பு மத்தி வலய ஆசிரிய ஆலோசகர் ஜாபீர் கரீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like