கல்­வி­மான்­க­ளுக்கு அழைப்பு விடு­க்கி­ன்றார் அரச தலை­வர்

நாட்­டின் சவால்­களை வெற்றி கொள்­வ­தற்கு அறிவு மற்­றும் அனு­ப­வங்­க­ளு­டன் கூட்டு நிகழ்ச்­சித் திட்­டத்­தில் இணை­யு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அனைத்து கல்­வி­மான்­க­ளுக்­கும் அழைப்பு விடுத்­துள்ளார்.

பத்­தி­ர­முல்­லை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இந்த அழைப்பை விடுத்­துள்ளார்.

நாட்­டின் முன்­னேற்­றப் பய­ணத்­திற்கு கல்­வி­மான்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள பணி இன்று எவ்­வ­ளவு தூரம் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது என்­பது கேள்­விக்­கி­ட­மா­கி­யுள்­ளது.

அனைத்­துப் பொறுப்­புக்­க­ளும் அர­சி­யல்­வா­தி­க­ளி­டம் மட்­டும் விட்­டு­ வி­டப்­ப­டு­வ­தாக சமூ­கத்­தில் நில­வும் பிழை­யான கருத்து விரை­வில் சரி செய்­யப்­பட வேண்­டும்.

ஒரு நாட்­டின் முன்­னேற்­றப் பய­ணத்­தில் கல்­வி­மான்­க­ளின் குரல் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தா­கும். அவர்­கள் தாம­த­மின்றி தமது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும்.

இனப்­பி­ரச்­சி­னை­யி­லும், நல்­லி­ணக்க நிகழ்ச்­சித் திட்­டத் தி­லும் சிறந்­த­தோர் தீர்­வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு கல்­வி­மான்­க­ளும் பக்­க­சார்­பற்ற வகை­யில் தமது பொறுப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­வர வேண்­டும்.

ஏனைய சமூகப் பிரச்­சி­னை­ க­ளைத் தீர்ப்­ப­தில் அவர்­க­ளது அறிவு மற்­றும் அனு­ப­வம் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தா­கும்.

எமது நாடு கல்­வி­மான்­களை உரு­வாக்­கு­வ­தில் எந்த வகை ­யி­லும் பின் நிற்­க­வில்லை. ஆனால் நாடு குறித்து சிந்­திக்­காது கல்­வி­மான்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றிச் செல்­வது அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளில் பெரிய சவா­லாக மாறி­யுள்­ளது.

அர­சி­யல்­வா­தி­கள் என்ற வகை­யில் அதற்­குத் தீர்வு வழங்க முற்­ப­டு­கை ­யில் அதனை அர­சி­யல் சார்­பா­னது என்று சிலர் அடை­யா­ளப்­ப­டுத்த முயற்­சித்து வரு­கின்­ற­னர்.

கல்­வி­மான்­கள் தாய் நாட்­டுக்­காகத் தமது பொறுப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான தரு­ணம் உரு­வா­கி­யுள்­ளது –என் றார் அரச தலை­வர்.

You might also like