இயந்திரம் மூலம் நாற்று நட்டு நஞ்சற்ற நடாக மாற்றுவோம்

விவசாயப் பணிப்பாளர் தெரிவிப்பு

இரசாயனப் பசளைகளுடன் சேதனப் பசளைகளையும், வேளாண்மைச் செய்கைக்கு இடுவதன் மூலம் உச்ச விளைச்சலைப் பெறலாம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு மூலமான வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும், வெல்லாவெளிப் பிரதேச விவசாயிகள் நிரூபித்துள்ளார்கள். என மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செல்வாபுரம் கிராமத்தில் 14 ஏக்கரில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர்தெரிவித்தாவது,

வேளாண்மைச் செய்கையில் நவீன தொழில் நுட்பமும் அதற்குரிய பசளைப் பிரயோகத்தையும், சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.

இயந்திரம் மூலம் நடுகை செய்தால் அடுத்து வரும் சிறுபோகத்தில் விவசாயிகளின் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும்.

இந்தச் செய்கையின் மூலம் பயிரின் செறிவு, நோய்த்தாக்கங்கள் இன்மை, களைகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பலவற்றிற்குரிய செலவுகளும் மிகக்குறைவாகத்தான் தேவைப்படும்.

இயந்திரம் மூலம் நெல்நாற்று நட்டு வேளாண்மை செய்கையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் நஞ்சற்ற நட்டைக் கட்டியெழுப்பலாம் என்றார்.

விவசாயப் போதனாசிரியர் எஸ்.சசிகுமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், பெரும்பாக
உத்தியோகஸ்த்தர் கே.உதயகுமார் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

You might also like