உத­யன் மீது வட­ம­ராட்­சி­யில் சீறிப் பாய்ந்­தார் சுமந்­தி­ரன்

அச்சு ஊட­கங்­கள் உண்­மைக்­குப் புறம்­பான செய்­தி­களை வெளியிட்டு அரசை தர்­ம­சங்­க­டத்­துக்குள் தள்­ளி­ வ­ரு­கின்­றன. குறிப்­பாக வட­ப­கு­தி­யில் இருந்து வெளி­வ­ரு­கின்ற உத­யன் பத்­தி­ரிகை இந்­தச் செயற்­பாட்­டில் ஈடு­பட்டு வரு­கின்­றது.

இவ்­வாறு நேற்­றுச் சீறிப் பாய்ந்­தார் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ .சுமந்­தி­ரன்.

உடுப்­பிட்­டித் தொகுதி தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளு­ட­னாக சம­கால அர­சி­யல் கலந்­து­ரை­யா­டல் கர­ண­வாய் மூத்­த­வி­நா­ய­கர் ஆல­யத்துக்கு அண்­மை­யில் இடம் பெற்­றது.

அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே இவ்­வாறு சீறிப்­பாய்ந்­தார்.

அவர் தெரி­வித்­த­தா­வது:

மகா­நா­யக்க தேரர்­கள்­தான் இந்தநாட்­டின்சட்­ட­திட்­டங்­க­ளைத் தீர்­மா­னிப்­பது என்­றால் நாடா­ளு­மன்­றம் தேவை­யில்­லையே மக்­க­ளின் கருத்­துக்­க­ணிப்­புத் தேவை­யில்­லையே! இது பற்றி நாடா­ளு­மன்­றத்­தில் நான் பேசி­யி­ருந்­தேன்,

4 மகா­நா­யக்க தேரர்­கள் இந்த நாட்­டின் எதிர்­கா­லத்­தைத் தீர்­மா­னிப்­ப­தாக இருந்­தால் இந்த நாடா­ளு­மன்­றத்­தைக்கலைத்­து­விடுங்கள், எதற்கு இங்கு வந்து நாம் துன்­பப்­ப­ட­வேண்­டும் என்று கேட்­டேன். ஒரு­வ­ரும் வாய் திறந்து ஒரு வச­னம் பேச­வில்லை.

அவர்­க­ளுக்கு இல்­லாத ஒரு மதிப்பை நீங்­கள் ஏன் கொடுக்கிறீர்கள்?. நீங்­கள் என்று சொல்­கின்­ற­போது தமிழ் ஊட­கங்­க­ளி­டம்­தான் கேட்­கி­றேன்.

மாகா­நா­யக்க தேரர்­கள் சொல்­லி­விட்­டார்­கள் என்று துள்­ளிக் குதித்­துக்­கொண்­டி­ருப்­பது தமிழ் ஊட­கங்­கள்­தான். ஏதோ அவர்­கள்­தான் (மகா­நா­யக்­கர்­கள்) இந்த நாட்­டின் எதிர்­கா­லத்தை நிர்­ண­யிக்­கி­ற­வர்­கள் மாதிரி.

மகா­நா­யக்க தேரர்­கள் சொல்­ல­வே­யில்லை (புதிய அர­ச­மைப்பு வேண்­டாம் என்­கிற செய்தி). அது முதலே வந்த கூற்று, செய்தி, அதைத் திருப்பி எடுத்து திருப்பி வெளி­யிட்­டுள்­ளன.

இடை­யில் மகா­நா­யக்க தேரர்­கள் வித்­தி­யா­ச­மாப் பேசியிருக்கிறார்­கள். தினேஸ் குண­வர்த்­தன போய்ப்பேசும்­போ­தும் சொல்லியிருக்கிறார்­கள்.

புதிய அர­ச­மைப்பு வரும் வரை­யில் ஏன் தேவை­யில்­லா­மல் பேசு­கின்­றார்­கள் என்று கூறி­யி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளைக் கையாள வேண்­டி­ய­வர்­கள் அவர்­க­ளைக் கையாளட்டும்.

அவர்­க­ளுக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வத்தை நாங்­கள் ஏன் பதறியடித்­துக்­கொண்டு துடிச்­சுக்­கொண்டு அவர்­க­ளுக்­குக் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்று எனக்­குப் புரி­ய­வில்லை.

இன்­றைக்கு உத­யன் பத்­தி­ரி­கையை எடுத்­துப் பார்த்­தீர்­க­ளா­னால், அரச தலை­வர் பேசிய பேச்சு எப்­படி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது?

நான் இருந்­தேன் வவு­னி­யா­வில். ஒற்­றை­யாட்சி என்ற சொல்லை அவர் பயன்­டுத்­தவே இல்லை. ஏக்­கிய ரஜய என்ற சொல்­லுப் பயன்­ப­டுத்­தப்­ப­டவே இல்லை.

பயன்­ப­டுத்தி­யி­ருந்­தா­லும் அது ஒற்­றை­யாட்சி இல்லை இதன்­படி (இடைக்­கால அறிக்கை) .

ஆனால் அப்­ப­டிக்­கூட அவர் பாவிக்­க­வில்லை. ஏக்­கிய ராஜிய என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­த­வில்லை, ஏக்­கிய பாவய என்ற சொல்­லையே பயன்­ப­டுத்­தி­னார்.

ஏக்­கிய பாவய என்­றால் நாட்­டின் ஒரு­மைத் தன்மை.

அவர் அப்­ப­டிச் சொன்­ன­தற்கு உத­யன் கொடுத்­துள்ள தலைப்பு ஒற்­றை­யாட்சி. அரச தலை­வர் சொல்­லா­ததை, தமிழ்ப் பத்­தி­ரிகை போடுது – என்­றார்.

தென்­ப­கு­தி­யில் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி மகிந்த ராஜ­பக்ச தலைமை­யில் ஆர்ப்­பாட்­டப்­பே­ரணி ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

அத்­தகை பேர­ணியை நடத்தி நாட்­டைக் குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லைக்கு இட்­டுச்­செல்ல இத்­த­கைய தமிழ் ஊட­கங்­களே மூல­காரணங்­க­ளா­கின்­றன.

உத­யன் பத்­தி­ரிகை பாம்­புக்­குத் தலை­யும் மீனுக்கு வாலை­யும் காட்­டு­கின்ற வகை­யி­லான அர­ச­மைப்பு என்று அண்­மை­யில் எழு­திய ஆசி­ரிய தலை­யங்­கத்­தில் தற்­போ­தைய இடைக்­கால வரைவு தொடர்­பாக தவ­றாக எழு­தி­ய­தை­யும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.  – என்­றும் தெரி­வித்­தார்.

ஆசிரியர் குறிப்பு:

1. அரச தலை­வ­ரின் உரைக்கு உட­னுக்­கு­டன் தரப்­பட்ட மொழி­பெ­யர்ப்­பில் ‘ஒற்­றை­யாட்சி’ என்ற வாச­கமே பயன்­ப­டுத்­தப்­பட்­டது.
அதனை நிரூ­பிப்­ப­தற்­கான ஒலிப்­ப­திவை நாடா­ளு­மன்ற உறுப்பின­ருக்­குத் தர­மு­டி­யும்.

2. வவு­னியா நிகழ்­வில் கூடி­யி­ருந்­த­வர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் தமி­ழர்­கள் என்­ப­தா­லேயே அரச தலை­வ­ரின் உரைக்கு உட­னடி மொழி­பெ­யர்ப்பு வசதி ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டது.
அங்­கி­ருந்த தமி­ழர்­கள் அனை­வ­ரும் அரச தலை­வர் ஒற்றையாட்சி பற்­றிப் பேசி­னார் என்றே எடுத்­துக்­கொண்­டார்­கள்.

3. அந்த மொழி­பெ­யர்ப்பு இடம்­பெற்­ற­போது அவர் சொன்­ன­தைப் போன்றே சுமந்­தி­ர­னும் மேடை­யில் அமர்ந்­தி­ருந்து கேட்­டுக்­கொண்­டி­ருந்­தார்.
அப்­போது அவர் அந்­தத் திருத்­தத்­தைச் செய்­ய­வில்லை.

4.மூன்று தசாப்­தங்­க­ளாக, பௌத்த சிங்­க­ளத்­தி­டம் இருந்து பிரிந்து தனி­நாடு கேட்­டுப் போரா­டிய ஒரு சமூ­கத்­தி­டம் இருந்து இந்­த­ளவு ஆழ­மான சிங்­கள மொழி அறிவை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எதிர்­பார்ப்­பது கொஞ்­சம் அல்ல அள­வுக்கு மீறிய ஆசை.

5. மகா­நா­யக்­கர்­கள் சக்­தி­யற்­ற­வர்­கள் இந்த நாட்­டிலே என்­றால், பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­து­ட­னேயே இனப் பிரச்­சினை தீர்ந்திருக்­க­வேண்­டும்.

அந்த ஒப்­பந்­தத்­துக்கு என்ன நடந்­தது என்­ப­தும் அது யாரால் நிகழ்ந்­தது என்­ப­தும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­குத் தெரியாததல்ல.

6. மகா­நா­யக்­கர்­கள் எந்த சக்­தி­யும் அற்­ற­வர்­கள் என்­றால், அவர்­க­ளைத்திருப்­திப்­ப­டுத்­த­வ­தற்­காக அரச தலை­வர்­கள் மாறி மாறி ஏன் கருத்­து­ரைக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அவர்­க­ளைச் சென்று ஏன் சந்­திக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் அண்­மை­யில்­கூட தினேஸ் குண­வர்த்­த­னவை அனுப்பி ஏன் அவர்­க­ளு­டன் பேசி­னார்­கள் என்­ப­தை­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மக்­க­ளுக்­குத் தெளிவுபடுத்தினால் நல்­லது.

You might also like