சுமந்­தி­ரன், அடைக்­கல­நா­தன் அர­சின் சூழ்ச்­சிக்­குத் துணை

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ சுமந்­தி­ரன், செல்­வம் அடைக்­கல நாதன் போன்­ற­வர்­கள் தமிழ் பிர­தே­சங்­களை சிங்­களப் பிர­தே­ச­மாக்­கும் அர­சின் சூழ்ச்­சிக்குத் துணை­போ­கின்­ற­னர்.

நேற்று நடை­பெற்ற அரச தலை­வ­ரு­டைய நிக­ழ்வில் அவர்­கள் கலந்­து­கொண்­டது அத­னையே வெளிப்­ப­டுத்­த­கி­றது.

இவ்­வாறு .பி.ஆர்.எல.எப். கட்­சி­யின் தலை­வர் சுரேஸ் பிரமேச்சந்தி­ரன் தெரி­வித்­தார்.

கூட்­ட­மைப்பு என்­கின்ற பேரில், தமி­ழ­ர­சுக் கட்சி தான்­தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­பட்டு, இவ்­வா­றான விட­யங்­க­ளைக் கையாள்­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணி­யின் மத்­திய குழுக் கூட்­டம் நேற்று வவு­னி­யா­வில் நடை­பெற்­றது.

இந்­தக் கூட்­டத்­தின் பின்­னர் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பில் கருத்து தெரி­வித்­த­போதே, சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரி­வித்­த­தா­வது; காணா­மல் போன­வர்­கள், அர­சி­யல் கைதி­க­ளு­டைய விட­யங்­க­ளில் எந்த வித மாறு­தல்­க­ளும் இல்­லாது அரசு தனது முடி­வில் உறு­தி­யாக இருக்­கின்ற நிலமை கண்­டிக்­கப்­ப­ட­வேண்­டி­யது,

அரசு கூறு­கின்ற நல்­லெண்­ணங்­கள் எல்­லாம் அர­சா­லேயே குழி­தோண்­டிப் புதைக்­கப்­ப­டு­கி­ன்றன.

நேற்­றை­ய­தி­னம் (நேற்று முன்­தி­னம்) வவு­னி­யா­வுக்கு வருகை தந்த அரச தலை­வர் தமி­ழர்­க­ளது பிர­தே­சங்­க­ளைக் கப­ளீ­க­ரம் செய்து,

அதற்கு சிங்­கப் பெய­ரிட்டு அந்­தப் பிர­தே­சங்­களை தமி­ழர்­க­ளி­டம் இருந்து பறித்து சிங்­கள மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தான உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­னார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று (நேற்று முன்­தி­னம்) நடை­பெற்­றது.

இந்­தப் புதிய, நல்­லாட்சி என்று சொல்­லப்­ப­டு­கின்ற அரசு கூட எந்­த­வி­த­மான மாற்­றங்­க­ளை­யும் செய்­ய­யா­மல், மகிந்த எவ்­வாறு தமிழ் மக்­க­ளுக்கு மாறான செயற்­பா­டு­க­ளைச் செய்­தாரோ,

அதே விட­யங்­க­ளுக்­காக உறுதி வழங்­கும் நிகழ்­வையே நேற்­றுச் செய்­தி­ருந்­தது.

அந்த வைப­வத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ சுமந்­தின், செல்­வம் அடைக்­க­ல­நா­தன் போன்­றோர் கலந்து கொண்­ட­மை­யா­னது நிச்­ச­ய­மாக இவர்­கள் எல்­லோ­ரும் சேர்ந்து தமி­ழர் பூமியை சிங்­க­ளப்­பூமி ஆக்­கு­வ­தற்கு அர­சு­டன் உடந்­தை­யா­கப் போகின்­றார்­களா என்ற விமர்­ச­னங்­கள் எமது மத்­தி­ய­குழுக்கூட்டத்­தில் எழுப்­பி­யது.

இந்த விட­யங்­கள் ஆரோக்­கி­ய­மான விட­யங்­கள் அல்ல.

முக்­கி­ய­மா­கக் கூட்­ட­மைப்பு என்ற பெய­ரில் தமி­ழ­ர­சுக்­கட்சி,மிக­வும்தான்­தோன்­றித்­த­ன­மாக இந்த விட­யங்­க­ளைக் கையாளுகின்றது.

அது மாத்­தி­ர­மல்­லா­மல் அது தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மானமுறை­யில்,இந்­தச்செயற்­பா­டு­ளை முன்­னெ­டுத்­துச் செல்கிறது என்ற அடிப்­ப­டை­யில்

இது தொடர்­பான சரி­யான முடி­வு­களை ஈழ­மக்­கள் புறட்­சி­கர விடு­தலை முன்­னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சரி­யான முறை­யில் விரை­வாக எடுக்­கும் எண்­றும் கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள்ளே இருக்­கக் கூடிய தமி­ழ­ர­சுக் கட்சி ஏற்­க­னவே தமிழ்­மக்­க­ளி­டம் இருந்து பெற்­றுக்­கொண்ட ஆணை­யில் இருந்து வெளி­யே­றி­யி­ருக்­கின்­றது.

தேர்­தல் விஞ்­சா­ப­னங்­க­ளிலே கூறப்­பட்ட கொள்­ளை­கள் எல்­லாம் கைவி­டப்­பட்டு தமிழ்­மக்­கள் வழங்­கிய ஆணை­க­ளில் இருந்து அந்­தக் கட்சி வில­கி­யுள்­ளது

என எமது மத்­தி­ய­கு­ழுக்­கூட்­டத்­தின் பல­ரது கருத்­துக்­க­ளாக உள்ளன என்­றார்.

You might also like