வழித்துத் துடைத்தது தென்னாபிரிக்க அணி

பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3:0 என்ற அடிப்படையில் மிகமிக இலகுவாகக் கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி.

இந்தத் தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்தது. முதலிரு ஆட்டங்களிலும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்த நிலையில் நேற்றைய மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 6 இலக்குகளை இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக பிளாசிஸ் 91 ஓட்டங்களையும், குயின் டன் டி ஹொக் 73 ஓட்டங்களையும், மார்க்ரம் 66 ஓட் டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் மிராஸ், அகமட் இருவரும் தலா 2 இலக்கு களைக் கைப்பற்றினர்.

பதிலுக்குக் கமிறங்கிய பங்களாதேஷ் அணி 169 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்ததை அடுத்து 200 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு ஆட்டங்களைக் கொண்ட ரி-20 தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது.

You might also like