டோக்லாம் விவ­கா­ரத்தில் பூட்­டா­னுக்கு இந்­தியா பாராட்டு

டோக்­லாம் விவ­கா­ரத்­தில் தனக்கு ஆத­ர­வாக நின்­ற­ மைக்­காக பூட்­டா­னைப் பாராட்­டி­யுள்­ளது இந்­தியா. இந்­திய குடி­ய­ர­சுத் தலை­வர் ராம்­நாத் கோவிந், பூட்­டான் மன்­ன­ருக்கு தனது பாராட்­டைத் தெரி­வித்­தார்.

இந்­தியா – பூட்­டான் – சீனா ஆகிய நாடு­க­ளின் எல்­லை­கள் சந்­திக்­கும் இடம் சிக்­கிம். இந்­தப் பகு­தி­யில் உள்ள டோக்­லாம் என்ற இடம் தமக்­குத்­தான் சொந்­தம் என்று மூன்று நாடு­க­ளும் வலி­யு­றுத்­து­கின்­றன.

கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்­னர் இந்­தப் பகு­தி­யில் சாலை அமைக்­கும் திட்­டத்தை முன்­னெ­டுத்­தது சீனா. இந்­தியா எதிர்ப்­புத் தெரி­வித்­தது. இந்­தி­யா­வின் எதிர்ப்­பைக் கண்­டு ­கொள்­ளாத சீனா, இந்­திய இரா­ணு­வத்­தின் இரண்டு பதுங்கு குழி­களை அகற்­றி­விட்டு சாலை அமைக்­கும் திட்­டத்தை முன்­னெ­டுத்­தது.

இதை­ய­டுத்து ஏரா­ள­மான சிப்­பாய்­களை அங்கு குவித்­தது இந்­தியா. இதை­ய­டுத்து சீனா­வும் ஏரா­ள­மான சிப்­பாய்­களை அங்கு நிறுத்­தி­யது. அண்­மை­யி­லேயே குறித்த பகு­தி­யில் முகா­மிட்­டி­ருந்த தமது சிப்­பாய்­களை திரும்­பப்­பெற இரு­த­ரப்­பும் சம்­ம­தம் தெரி­வித்து திரும்­பப் பெற்­றன.

இந்­தப் பதற்­ற­மான சூழ் நி­லை­யில் இந்­தி­யா­வுக்கு ஆத­ர­ வாக பூட்­டான் செயற்­பட்­டது.

பூட்­டான் மன்­னர் ஜிக்மே இந்­தி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். அவ­ருக்­கும் ராம்­நாத் கோவிந்­துக்­கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பின்­போதே பூட்­டா­னுக்கு தனது பாராட்­டத்­தைத் தெரி­வித்­தார் ராம்­நாத்
கோவிந்.

You might also like