வெங்காயத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்படா- திறைசேரி அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கான வரியைக்குறைக்குமாறு வாழ்வாதார செலவின குழு , திறைசேரியிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமையால், இறக்குமதி வரியைக்குறைக்கமாறு, வாழ்வாதார செலவின குழு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்தது.

அரசின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலைகளைக் குறைக்க முடியாது என்று திறைசேரி அறிவித்துள்ளது.

தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 170 தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like