கல்­முனைபிரிக்­கப்­பட்­டால் வடக்கு நக­ர­சபை உரு­வாக்­கப்­ப­ட ­வேண்­டும்

சில வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­கள் கல்­மு­னைக்­கு­டியைக் கல்­மு­னை­யாக்க முயற்­சிக்­கின்­ற­னர். கல்­மு­னையை நான்­கா­கப் பிரிக்­க­வேண்­டும் என்று முஸ்­லிம் தரப்­புக்­க­ளால் கோரிக்­கை­கள் முன் வைக்­கப்­படு­கின்­றது.

கல்­மு­னையை நான்­காகப் பிரிக்­கின்­ற­ போது இங்­குள்ள தமி­ழர்­க­ளின் உரிமை, சுதந்­தி­ரம் மறுக்­கப்­ப­டும். இதி­லி­ருந்து தமி­ழர்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டு­மா­னால் வடக்கு நகர சபை உரு­வாக்­கப்­பட வேண்­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அம்­பாறை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் க.கோடீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதி­தாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை உரு­வாக்­கு­தல் மற்­றும் தரம் உயர்த்­தல் தொடர்­பான திட்ட முன்­மொ­ழி­வு­களை முன் வைக் கு­மாறு மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி அமைச்சுக் கோரிக்கை விடுத்­துள்­ளது.

கல்­மு­னை­யில் உள்ள தமிழ், முஸ்­லிம் மக்­கள் பல திட்­டங்­களை முன் மொழிந்து வரு­கின்­ற­னர். கல்­முனை என்­பது தமி­ழர்­க­ளின் பூர்­வீ­கத் தாய­க­மா­கும். இங்கு 82 சத­வீ­த­மான தமிழ் மக்­கள் வாழ்­கின்­றார்­கள்.

தமி­ழர்­க­ளின் பிர­தே­சத்­திற்­குள் முஸ்­லிம்­க­ளின் வியா­பார நிறு­வ­னங்­கள் மட்­டுமே உள்­ள­டங்­கு­கின்­றன. கல்­முனை என்­பது வேறு கல்­மு­னைக்­குடி என்­பது வேறா­கும். இதை நாம் நன்கு உண­ர­வேண்­டும்.

கல்­மு­னைக்­குடி – சாய்ந்­த­ம­ரு­துப் பகு­தியை ஒன்­றி­ணைத்து ஒரு சபை­யும், கல்­முனைத் தர­வைக் கோவி­லை­யும் பெரி­ய­நீ­லா­வ­ணையை எல்­லை­யா­கக் கொண்டு ஒரு சபை­யும் அமைக்­கப்­பட வேண்­டும்.

அவ்­வாறு இல்­லா­விட்­டால் கல்­முனைப் பிர­தே­சத்­தி­லுள்ள தமிழ்க் கிரா­மங்­களை உள்­ள­டக்­கி­ய­தான ஒரு நகர சபை அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பதே இங்­குள்ள மக்­க­ளின் நிலைப்­பா­டா­கும்.

கல்­மு­னை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் பிர­தேச பிரிப்­புக்­கள் இனங்­க­ளுக்கு இடை­யில் மேலும் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­த­லாம். இதனைக் கருத்­தி­லெ­டுத்துப் பிர­தேச பிரிப்­புக்­களை மேற்­கொள்­ள­வேண்­டும்.

சாய்ந்த மரு­துக்குத் தனி­யான பிர­தேச சபை ஒன்­றினை வழங்­கு­வ­தில் எமக்கு எவ்­வித ஆட்­சே­ப­னை­யும் கிடை­யாது. கல்­முனை வாழ் தமிழ் மக்­க­ளின் நியா­ய­மான இக் கோரிக்­கை­யும் நிறை­வேற்­றப்­பட வேண்­டும் என்­பதே எங்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும் -– என்­றார்.

You might also like