உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன்

வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

You might also like