பாடசாலை செல்லும் மூன்றிலொரு பகுதி மாணவர்கள் காலை உணவு எடுப்பதில்லை

பாட­சா­லைக்­குச் செல்­லும் மாண வர்­க­ளில் 14 லட்­சம் பேர், அதா­வது மூன்­றி­லொரு பகு­தி­யி­னர் காலை உணவு உண்­பது இல்லை என்று ஆய்­வு­க­ளி­லி­ருந்து அறி­ய­வந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்­சின் மருத்­துவ ஆய்வு மையத்­தின் போசாக்­குப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

கெக்­கி­ராவ பிர­தே­சத்­தில் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக குற்­றம் சுமத்­தப் பட்டு மாண­வி­யொ­ரு­வர் பாட­சா­லை­ யி­லி­ருந்து விலக்­கப்­பட்ட செய்தி சமீ­பத்­தில் சமூக வலைத்­த­ளங்­க­ளில் பெரி­ய­ள­வில் பரி­மா­றப்­பட்­டது.

பசி கார­ண­மாக அம்­மா­ணவி வாந்தி எடுத்­த­தாக மருத்­துவ பரி­சோ­த­னை­யின் பின்­னர் தெரிய வந்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணி­யி­ லேயே காலை­யில் உணவு உண்­ணா­மல் செல்­லும் மாண­வர்­கள் தொடர்­பில் விப­ரம் வெளி­யா­கி­யுள்­ளது.

சுகா­தார அமைச்­ச­கத்­தின் மருத்­துவ ஆய்வு மையத்­தின் போசாக்­குப் பிரிவு சிறப்பு மருத்­துவ நிபு­ணர் டாக்­டர் ரேணுகா ஜய­திஸ்ஸ, காலை உணவு உட்­கொள்­ளா­மல் இருப்­பது பிள்­ளை­க­ளின் மூளை வளர்ச்­சி­யி­லும், உடல் வளர்ச்­சி­யி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். காலை உணவு எடுக்­காத பிள்­ளை­க­ளி­டம் கணித ஆற்­றல், நினை­வாற்­றல் குறை­தல், பல­வீ­ன­மாக காணப்­ப­டு­தல், பிரச்­சி­னை­களை தீர்க்­கும் ஆற்­றல் குறை­தல், போட்­டிப் பரீட்­சை­க­ளில் குறைந்த புள்­ளி­களை பெறு­தல் மற்­றும் உய­ரம் குறை­தல் போன்ற அறி­கு­றி­கள் காணப்­ப­டும் – என்­றார்.
காலை உணவு எடுக்­கா­மல் பாட­சா­லைக்கு செல்­லும் மாண­வர்­கள் மேல் மற்­றும் தென் மாகா­ணங்­க­ளிலே அதி­கம் காணப்­ப­டு­வ­தா­க­வும் தக­வல்­கள் மூலம் அறி­ய­மு­டி­கின்­றது.

‘பிள்­ளை­க­ளுக்கு காலை­யில் ஒரு கோப்பை பால் கொடுப்­பதை பெற்­றோர்­கள் பழக்­க­மாக வைத்து கொள்­கின்­ற­னர். அது போது­மா­ன­தாக இல்லை. ஒரு கோப்பை பாலை விட பிள்­ளை­க­ளுக்கு காலை உணவு கொடுப்­பது முக்­கி­ய­மா­ன­ தா­கும். பாட­சாலை செல்­லும் வய­தில்­தான் பிள்­ளை­க­ளி­டம் துரித வளர்ச்சி காணப்­ப­டும். காலை உணவு என்­பது தானி­யம், பழ­வகை, மரக்­கறி, மாமி­சம் என்று மூன்று உணவு பிரி­வு­களை கொண்ட பிர­தான உணவு வேளை­ யாக இருத்­தல் வேண்­டும். பால் என்­பது இதில் ஒரு பிரிவு மட்­டுமே. அதனை இடை உண­வாக கொடுக்­க­லாம்’ என்று சுகா­தார அமைச்­ச­கத்­தின் மருத்­துவ ஆய்வு மையத்­தின் போசாக்­குப் பிரிவு சிறப்பு மருத்­துவ நிபு­ணர் டாக்­டர் ரேணுகா ஜய­திஸ்ஸ தெரி­வித்­தார்.

You might also like