மரம் நடுகை மாதத்­தில் மரங்­களை வழங்க ஏற்­பாடு

வடக்கு மாகா­ணத்­தில் மரம் நடுகை மாதத்­தில் இந்தமுறை பய­னா­ளி­கள் விரும்­பும் மரங்­களே வழங்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் உத­வித் திட்­ட­மி­டல் பணிப்­பா­ளர் ஈ. சுரேந்­தி­ர­நா­தன் தெரி­வித்­தார்.

இது பற்றி அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்­தின், மர நடு­கைச் செயற்பாடு­கள் கடந்த முதலாம் திகதி புதன்­கி­ழமை அன்று ஆரம்­பிக்­கப்­பட்­டன.

வழமை போன்ற மரம் நடு­கை­யாக இல்­லா­மல் இந்தமுறை ஒரு மில்­லி­யன் ரூபா ஒதுக்­கீட்­டில் 25 கிரா­மங்­கள் தெரிவு செய்­யப்­பட்டு அங்கே மரம் நடுகை செயற்பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

வழ­மை­யாக இந்தத் திட்­டத்­தில் பொது­வான இடங்­க­ளில் எம்­மால் மரங்­கள் நடப்­ப­டும். ஆனால் அவை தொடர்ச்­சி­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வது இல்லை.

இத­னால் பெய­ருக்கு மரம் நடுகை மாதத்தைப் பின்­பற்­று­வது போல அமைகிறது இந்­தச் செயற்பாடு.

அத்­து­டன் எம்­மால் தெரிவு செய்­யப்­ப­டும் மரங்­களே பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வதே வழமை.

தற்­போது பிர­தேச செய­ல­கத்­தின் கீழ் பய­னா­ளி­கள் தெரிவு நடை­பெற்று வரு­கின்­றது. பய­னா­ளி­க­ளின் எண்­ணிக்­கையை மட்­டும் எமக்குத் தரா­மல், அவர்­க­ளுக்கு எந்த வகை­யான மரம் வேண்­டும் என்­றும் விவரங்­க­ளைத் திரட்டி தரு­மா­றும் நாம் கூறியுள்ளோம்.

பய­னா­ளி­கள் விரும்­பும் மரங்­களை நாம் அவர்­க­ளுக்கு வழங்­கும் பட்­சத்­தில் அவர்­கள் அதனை உரிய முறை­யில் பரா­ம­ரித்து பய­னைப் பெற முன்­வ­ரு வார்கள். ஆகவே இந்த முறை மேற்­கொள்­ளப்­ப­டும் மரம் நடுகை நிகழ்­வு ­கள் பய­னுள்­ள­தாக அமை­ யும் –என்­றார்.

You might also like