இலங்கைக்கு 111ஆவது இடம்

2018ஆம் ஆண்­டில், உல­கில் வணி­கம் செய்­வ­தற்குச் சிறந்த நாடு­க­ளின் பட்­டி­யலை உலக வங்கி வெளி­யிட்­டுள்­ளது.

190 நாடு­க­ளின் இந்­தப் பட்­டி­ய­லில் இலங்கை 111 ஆவது இடத்­தில் உள்­ளது.

இந்­தப் பட்­டி­ய­லில் நியூ­ஸி­லாந்து முத­லி­டத்­தி­லும், சிங்­கப்­பூர் இரண்­டா­வது இடத்­தி­லும், டென்­மார்க் மூன்­றா­வது இடத்­தி­லும் உள்­ளன.

தென்­கொ­ரியா, ஹொங்­கொங், அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, நோர்வே, ஜோர்­ஜியா, சுவீ­டன் ஆகிய நாடு­கள் முதல் பத்து இடங்­க­ளை­யும் பிடித்­துள்­ளன.

தெற்­கா­சிய நாடு­க­ளில், பூட்­டான் 75ஆவது இடத்­தி­லும், இந்­தியா 100ஆவது இடத்­தி­லும், நேபா­ளம் 105ஆவது இடத்­தி­லும், இலங்கை 111ஆவது இடத்­தி­லும், மாலை­தீவு 136ஆவது இடத்­தி­லும் உள்­ளன.

You might also like