60 நாள்களில் ரூபா 1300 மில்லியன் பெறுமதியான அரிசி இறக்குமதி

இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த இரண்டு மாத காலத்துக் குள் ஆயி­ரத்து 300 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக கைத்­தொ­ழில் மற்­றும் வர்த்­தக அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

வாழ்க்­கைச் செல­வுக்­கான அமைச்­ச­ரவை உப­கு­ழு­வின் தீர்­மா­னத்துக்கு அமை­வாகக் கைத்­தொ­ழில் வர்த்­தக அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னின் பணிப்­பு­ரை­யில் நேற்­று­முன்­தி­னம் வரை 20 ஆயி­ரம் மெற்­றிக்­தொன் அரிசி, இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்­தத் தொகை முழு­வ­தும் சந்­தைக்கு விநியோ­கத்­ துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

நாட்­ட­ரி­சி­யா­னது கிலோ­கி­ராம் 74 ரூபா­வுக்கு விற்­கப்­ப­டு­கின்­றது. 25 கிலோ­வுக்கு மேற்­பட்ட அரி­சியைக் கொள்­வ­னவு செய்­ப­வ­ருக்குக் கிலோ கிராம் 73 ரூபா­வுக்கு விற்­பனை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்ய முடி­வு­செய்­யப்­பட்­டுள்ள 30 ஆயி­ரம் மெற்­றிக்­தொன் சம்பா அரி­சி­யில் 15 ஆயி­ரம் மெற்­றிக்­தொன் சம்­பா­வுக்­கான கட்­ட­ளை­கள் அந்த நாட்­டுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அரி­சி­யா­னது இந்த மாத நடுப் பகு­தி­யில் வந்து சேரு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

அரி­சியை இறக்­கு­மதி செய்­வ­தற்கு அரசு 926 மில்லியன் ரூபாவைச் செலவிடுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like