பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விகள் வருத்தின

மத்தியூஸ் கவலை

மட்டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­டங்­க­ளில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரா­கக் கிடைத்த தோல்­வி­கள் என்னை மிகை­யா­கக் காயப்­ப­டுத்­தின என்று தெரி­வித்­தார் இலங்கை அணி­யின் முன்­னாள் தலை­வர் மத்­தி­யூஸ்.

இந்­தத் தொடர்­க­ளில் காயம் கார­ண­மாக மத்­தி­யூஸ் வில­கி­யி­ருந்­தார். இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொட­ரில் கலந்­து­கொள்­வ­தற்­காக தற்­போது இந்­தியா சென்­றுள்ள அவர் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான தொடர் தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரைக் கைப்­பற்­றிய போதி­லும், அடுத்த இரண்டு வாரங்­கள் மிக­வும் கவ­லை­த­ரும் விதத்­தில் அமைந்­தி­ருந்­தன. இலங்கை வீரர்­கள் விளை­யா­டு­வதை வீட்­டி­லி­ருந்த பார்த்­துக்­கொண்­டி­ருந்­தேன்.

அணி தோல்­வி­ய­டை­யும் சந்­தர்ப்­பத்­தில் பங்­க­ளிப்­புச் செய்ய இய­லா­மல் இருப்­பது வேதனை மிகுந்தது’’ என மத்தியூஸ் மேலும் தெரிவித்தார்.

You might also like