இலங்கைக்கு எதிரான தொடரில்
பாண்டியாவுக்கு கட்டாய ஓய்வு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில், சகலதுறை வீரரான பாண்டியாவுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் சமீப காலமாகத் தொடர்ந்து ஓய்வின்றி விளையாடி வருகிறார் பாண்டியா.
இந்த நிலையில் அவரது உடற்தகுதியைக் கருத்திற் கொண்டு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான தொடர்கள் முடிவ டைந்த பின்னர் இந்திய அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தத் தொடரைக் கருத்திற்கொண்டே பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களுக்கான இந்திய அணியில் இருந்து சமீபகாலமாகப் புறக்கணிக்கப் பட்டு வரும் அஸ்வின், ஜடேயா இருவருக்கும் டெஸ்ட் அணியில் இடம்கிடைத்துள்ளது.
இந்திய அணி விவரம் – – கோக்லி (தலைவர்), லோகேஸ் ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, ரோகித், சகா, அஸ்வின், ஜடேயா, குல்தீப் யாதவ், மொகமட் சமி, ஊமேஸ் யாதவ், புவனேஸ்வர் குமார், இசாந் சர்மா.