ஆர்ஜென்ரீனாவை நடத்துவதில்லை

மெஸ்ஸி மறுப்பு

‘‘ஆர்­ஜென்­ரீனா கால்­பந்­தாட்ட அணி­யின் தலைவரான மெஸ்ஸி, ஆர்­ஜென்­ரீனா கால்­பந்­தாட்ட அணி தொடர்­பில் சகல முடி­வு­க­ளை­யும் தீர்­மா­னிக்­கி­றார்’’ என்று வெளி­யான குற்­றச்­சாட்டை மெஸ்ஸி மறுத்­துள்­ளார்.

தேவை­யற்ற விட­யங்­க­ளில் தனது தலை­யீடு இல்லை என்­பதை அவர் ஆணித்­த­ர­மாக எடுத்­தி­யம்­பி­யுள்­ளார்.

‘‘என்­னைப் பற்­றிய நகைப்­புக்­கி­ட­மான கருத்­து­களை கடு­ைம­யா­கக் கண்­டிக்­கின்­றேன். எதை­யும் அறி­யா­மல் கருத்­து­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இத­னால் ஆத்­தி­ரம் ஏற்­ப­டு­கின்­றது, எனி­னும் இவற்­றுக்­கெல்­லாம் பழக்­கப்­பட்டு விட்­டேன்.

எவ்­வா­றெ­னி­னும் குறித்த கருத்­து­கள் எனக்கு மட்­டு­மல்­லாது, எனது சக வீரர்­க­ளுக்­கும் மரி­யா­தைக் குறைவை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

தேசிய கால்­பந்­தாட்ட அணி­யில், நான் விரும்­பிய நண்­பர்­கள் மற்­றும் பயிற்­சி­யா­ளர்­களை கொண்­டு­வ­ரு­கி­றேன் என்­பது பொய். அணி­யில் ஒரு சாதா­ரண வீர­ராக நான் உள்­ளேன். அவ்­வாறே இருக்­கவும் விரும்­பு ­ கி­றேன்’’ என மெஸ்ஸி மேலும் தெரி­வித்­தார்.

You might also like