இந்தியாவின் சவாலை சந்திக்கத் தயார் இப்படித் தெரிவித்தார் டினேஸ் சந்திமல்

இன்னும் சில தினங்­க­ளில் ஆரம்­ப­மா­க­வுள்ள இந்­திய அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொடர் மிக­வும் சவா­லா­ன­தாக இருக்­கும் என்று தெரி­வித்­தார் இலங்கை அணி­யின் தலை­வர் சந்­தி­மல்.

இலங்கை அணி இந்­தி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. அங்கு இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான தலா மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட டெஸ்ட், ரி–-20, ஒரு­நாள் தொடர்­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

முத­லா­வ­தாக டெஸ்ட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­படி முத­லா­வது ஆட்­டம் கொல்­கத்­தா­வில் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­றது. இந்­தத் தொடர் தொடர்­பாக நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே சந்­தி­மல் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘சமீ­பத்­தில் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தில் நடந்த டெஸ்ட் தொட­ரில் நாங்­கள் வெற்­றி­பெற்­றோம். அந்த உத்­வே­கத்­தில் அணி­யில் உள்ள வீரர்­கள் உள்­ள­னர்.

டெஸ்ட் கிரிக்­கெட்­டில் இந்­தியா தற்­போது உல­கின் முதல்­தர அணி என்­பதை அறி­வோம். கடந்த 2 ஆண்­டு­க­ளாக இந்­திய அணி­யி­னர் சிறப்­பாக விளை­யாடி வரு­கி­றார்­கள். இந்­தத் தொடர் எங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய சவா­லாக இருக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

ஆனால் கடந்த கால ஆட்­டங்­க­ளின் முடிவை திரும்­பிப் பார்க்க விரும்­ப­வில்லை. இந்­தத் தொட­ருக்கு எங்­களை நன்கு ஆயத்­தப்­ப­டுத்தி வரு­கி­றோம்.

இந்­திய மண்­ணில் நாங்­கள் ஒரு போதும் டெஸ்ட் தொட­ரைக் கைப்­பற்­றி­ய­தில்லை. இந்­தி­யா­வில் டெஸ்ட் தொட­ரொன்­றைக் கைப்­பற்­று­வது இலங்கை வீரர்­க­ளின் கன­வா­கும்.

கொல்­கத்­தா­வில் டெஸ்ட் கிரிக்­கெட்­டில் நாங்­கள் விளை­யா­டு­வது இதுவே முதல் முறை­யா­கும். கொல்­கத்­தா­வில் ரசி­கர்­கள் கூட்­டத்­தின் முன்­னி­லை­யில் ஆடு­வது எப்­போ­தும் மகிழ்ச்­சி­யான அனு­ப­வ­மாக அமை­யும்.

ஒரு அணி­யாக தொடரை சிறப்­பாக ஆரம்­பிப்­பது முக்­கி­ய­மா­ன­தா­கும்.

இந்­தி­யா­வில் எனது முதல் டெஸ்ட் சுற்­றுப்­ப­ய­ணம் இது­தான். மத்­தி­யூஸ், கேரத் ஆகி­யோ­ரைத் தவிர எங்­கள் அணி­யில் உள்ள ஏனைய வீரர்­க­ளுக்கு இந்­தி­யா­வில் இது­தான் முதல் டெஸ்ட் தொட­ரா­கும்.

உண்­மை­யி­லேயே இது ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நல்ல சவா­லாக இருக்­கும். இந்­திய சுழல்­பந்து வீச்­சா­ளர்­கள் அஸ்­வின், ஜடேயா இரு­வ­ரி­ன­தும் சுழலை சந்­திக்­கத் தயா­ராக உள்­ளோம்’’ என சந்­தி­மல் மேலும் தெரி­வித்­தார்.

You might also like