காய­ம­டைந்­தார் ஆஸி. வீரர் நீல்

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் வேகப்­பந்­து­வீச்­சா­ளர் கட்­டர் நீலின் முது­குப் பகு­தி­யில் காயம் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து அவர் ஆஷஸ் தொட­ரில் இருந்து வில­கு­வ­தற்கு அதிக வாய்ப்­புள்­ளது என்று கரு­தப்­ப­டு­கி­றது.

ஆஸ்­தி­ரே­லியா -– இங்­கி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான வர­லாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் தொடர் இன்னும் சில நாள்­க­ளில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­தத் தொட­ருக்­கான ஆஸ்­தி­ரே­லிய அணி­யில் கட்­டர் நீல் இடம்­பி­டித்­தி­ருந்­தார்.

வேகப்­பந்து வீச்­சா­ள­ரான அவர் பயிற்­சி­யின் போது காய­ம­டைந்­த­தன் கார­ணத்­தால் ஆஷஸ் தொட­ரில் இருந்து வில­கு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

நீல் அப்­படி வில­கி­னா­லும், அது ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் மட்­டில் பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தாது. ஹசில்­வூட், ஸ்ராக், கம்­மின்ஸ் உள்­ளிட்ட வேகப்­பந்து வீச்­சா­ளர்­கள் முழு உடல்­த­கு­தி­யு­டன் இருக்­கி­றார்­கள். அதி­லும் மிச்­செல் ஸ்ராக் அபார திற­னில் (போர்­மில்) உள்­ளார்.

You might also like