சீன விதிகளை மீறினார் ட்ரம்ப்

ட்ரம்ப், தனது சீன சுற்­றுப் பய­ணத்­தின் போது அந்த நாட்­டின் விதி­மு­றை­களை மீறி­யுள்­ளார் என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

ட்ரம்ப், தனது ஆசி­யப் பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக சீனா­வுக்­கும் சென்­றார். சீனா­வில் கீச்­ச­கம் (ருவிற்­றர்) உள்­ளிட்ட சில சமூக வலைத்­த­ளங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளில் அர­சி­யல் கருத்­துக்­க­ளைப் பதி­விட்­டால் அந்த நாட்­டில் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டும். அந்த அள­வுக்கு கட்­டுப்­பா­டு­கள் இறுக்­கப்­பட்­டுள்­ளன.

ட்ரம்ப், தனது நகர்­வு­களை கிச்­ச­கத்­தில் பதி­வி­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார். எனவே, சீனா­வில் அவர் கீச்­ச­கத்­தைப் பயன்­ப­டுத்த முடி­யுமா என்­பது தொடர்­பில் சந்­தே­கம் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் ட்ரம்ப், சீனா­வில் இருந்­து ­கொண்டு பல பதி­வு­களை வெளி­யிட்­டார். இது பெரும் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
‘‘அதி­பர் ட்ரம்ப் ருவிட் செய்­வதை அதி­கம் விரும்­பு­கி­றார் என்­பதை சீன அதி­கா­ரி­கள் நன்கு புரிந்து கொண்­டுள்­ள­னர்.

வெளி­நாட்­டுத் தலை­வர்­களை வர­வேற்­கும் போது அனைத்­தை­யும் கருத்­தில் கொள்ள வேண்­டும், அந்த வகை­யில் அதி­பர் ட்ரம்பின் தக­வல் பரி­மாற்­றத்­தில் எவ்­வித கட்­டுப்­பா­டு­க­ளை­யும் விதிக்க முடி­யாது’’ என சீனா­வின் துணை அய­லு­ற­ வுத்­துறை அமைச்­சர் ஷெங் செக்­கு­வாங் தெரி­வித்­தார்.

You might also like