வடகொரியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

பீஜிங்கில் வைத்து வலியுறுத்தினார் ட்ரம்ப்

‘‘வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ராக சீனா காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்’’ என்று வலி­யு­றுத்­தி­னார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப்.

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் தற்­போது ஆசிய நாடு­க­ளுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். தனது சுற்­றுப் பய­ணத்­தின் ஒரு பகு­தி­யாக அவர் சீனா­வுக்­கும் சென்­றி­ருந்­தார்.

அங்கு நேற்று முன் தினம் உரை­யாற்­று­கை­யி­லேயே ட்ரம்ப் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘வட­கொ­ரி­யா­வின் அணு­ஆ­யுத அச்­சு­றுத்­தல்­க­ளைத் தவிர்க்க சீனா உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். நேரம் வேக­மாக ஓடிக் கொண்­டி­ருக்­கி­றது. நாம் வேக­மா­கச் செயற்பட வேண்­டும்.

வட­கொ­ரி­யா­வின் அச்­சு­றுத்­தல்­களைத் தடுக்க சீனா உட­னடி நட­வ­டிக்களை எடுக்க வேண்­டும். பிற நாடு­க­ளைக் காட்­டி­லும் சீனா இதில் சிறப்­பாக செயற்­ப­டும்’’ என ட்ரம்ப் மேலும் தெரி­வித்­தார்.

பன்­னாட்­டுச் சட்­ட­திட்­டங்­களை மீறி தொடர்ந்து பல ஏவு­க­ணை­களைச் சோதித்து வரு­கி­றது வட­கொ­ரியா. அந்த நாடு கண்­டம் விட்­டுக் கண்­டம் பாயும் ஏவு­க­ணை­க­ளை­யும் ஐத­ர­சன் குண்­டுச் சோத­னை­க­ளை­யும் கடந்த செப்­ெரம்பர் மாதத்­தில் சோதித்­தி­ருந்­தது.

ஐத­ச­ர­சன் குண்­டுச் சோத­னை­யின்­போது 6.3 ரிச்­டர் அள­வில் நில அதிர்வு ஏற்­பட்­டது என்­றும் சொல்­லப்­பட்­டது. அத்­து­டன் நின்­று­வி­டா­மல் ஜப்­பா­னின் வான்­ப­ரப்­புக்கு மேலாகவும் ஏவு­க­ணைச் சோத­னை­க­ளை­ நடத்­தி­யது.

இது பல அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலை­யில் மற்­றொரு ஐத­ர­சன் குண்­டுச் சோத­னையை வட­கொ­ரியா மேற்­கொள்­ள­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வட­கொ­ரி­யா­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக ஐக்­கிய நாடு­கள் சபை தொடர்ந்து பல பொரு­ளா­தா­ரத் தடை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது.

வட­கொ­ரி­யா­வின் மூன்று முக்­கிய ஏற்­று­ம­தி­க­ளான நிலக்­கரி, இரும்பு, கட­லு­ணவு ஆகி­யன முடக்­கப்­பட்­டுள்­ளன. வட­கொ­ரி­யா­வுக்கு ஏனைய நாடு­க­ளில் இருந்து செல்லும் பொருள்­க­ளும் முடக்­கப்­பட்­டுள்­ளன.

எனி­னும் சீனா தனது மறை­முக ஆத­ரவை வட­கொ­ரி­யா­வுக்கு வழங்கி வரு­கின்­றது என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like