சக்திவாய்ந்த தலைவராக உருவாகிறார் பின் சல்மான்

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக சவூதி அரே­பி­யா­வின் பட்­டத்­துத்து இள­வ­ர­சர் முக­மது பின் சல்­மான் உரு­வெ­டுத்து வரு­கி­றார்.

சவூதி அரே­பிய மன்­னர் சல்­மான், முகமது பின் சல்­மானை பட்­டத்து இள­வ­ர­ச­ராக அறி­வித்த பின்­னர் அவர் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றார். பின் சல்­மா­னின் முக்­கிய திட்­டங்­கள் மூன்று.

ஒன்று, பழ­மை­வாத நாடு என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் சவூ­தியை அந்­தக் கோட்­பாட்­டில் இருந்து வெளியே கொண்­டு­வ­ரு­வது.

இரண்­டா­வது, ஊழல் இல்­லாத சவூ­தியை உரு­வாக்­கு­வது. மூன்­றா­வது, சவூ­தி­யின் முக்­கிய வரு­வாய் எரி­பொ­ரு­ளில் மட்­டும் தங்­கி­யி­ருத்­தல் அல்­லா­மல் ஏனைய துறை­க­ளி­லும் பரம்­ப­ல­டை­யச் செய்­வது.

தனது திட்­டங்­கள் வெற்­றி­ய­ளிக்­கும்­ப­டி­யான செயற்­பா­டு­க­ளை­யும் பின் சல்­மான் கடைக்­கொண்டு வரு­கி­றார்.

இதனால் சவூ­தி­யின் சக்தி மிகுந்த தலை­வ­ராக மட்­டு­மல்­லாது உல­கின் சக்தி மிகுந்த தலை­வ­ரா­க­வும் பின் சல்­மான் உரு­வெ­டுத்து வரு­கி­றார்.

You might also like