ஏமன் எல்லைகளை மூடியது கூட்டுப்படை

பஞ்சம் இரட்டிப்பாகும் என எச்சரித்தது ஐ.நா. சபை

ஏம­னின் எல்­லை­கள் சவூதி தலைமையிலான கூட்­டுப் படை­யால் மூடப்பட் டுள்ள நிலை­யில், எல்­லை­க­ளைத் திறக்­கா­விட்­டால் ஏமன், உல­கம் கண்­டி­ராத பெரும் உண­வுப் பஞ்­சத்தை எதிர்­கொள்­ளும் என்று எச்­ச­ரித்­தது ஐ.நா. சபை.

ஏமன் நாட்­டில் சன்னி பிரி­வைச் சேர்ந்த அதி­பர் மன்­சூர் ஹைதிக்­கும் ஷியா பிரி­வைச் சேர்ந்த ஹெளதி ஆயு­தக் குழு­வுக்­கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் முதல் உள்­நாட்­டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது.

இதில் அதி­பர் மன்­சூர் ஹைதிக்கு ஆத­ர­வாக சவுதி அரே­பியா செயல்­ப­டு­கி­றது. ஹெளதி ஆயு­தக் குழு­வுக்கு ஈரான் ஆத­ரவு வழங்­கு­கி­றது.

ஹெளதி ஆயு­தக் குழு­வின் பகு­தி­க­ளுக்­குள் அவ்­வப்­போது தாக்­கு­தல் நடத்தி வரு­கி­றது சவூதி அரே­பியா.

சவூதி அரே­பி­யா­வின் ரியாத் வானூர்தி நிலை­யத்­தைக் குறி­வைத்து கடந்த சனிக்­கி­ழமை ஏவு­கணை வீசப்­பட் டது. ஹெள­தி­யி­டம் தொலை தூரத்­துக்­குச் செல்­ல­வல்ல ஏவு­க­ணை­கள் இல்லை.

எனவே இந்த ஏவு­க­ணைத் தாக்­கு­தல் ஈரா­னால் நடத்­தப்­பட்­டி­ருக்­க­லாம் அல்­லது ஈரா­னால் ஹெளதி ஆயு­தக் குழு­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று சவூதி தலை­மை­யி­லான கூட்­டுப்­படை சந்­தே­கம் தெரி­வித்­தது.

எனவே, ஈரா­னில் இருந்து ஹெளதி ஆயு­தக் குழு­வுக்கு ஆயு­தங்­கள் கடத்­தப்­ப­டு­வது தவிர்க்­கப்­பட வேண்­டு­மா­யின் ஏமன் தனது எல்­லை­களை மூட வேண்­டும் என்­றும் கூட்­டுப்­படை உத்­த­ர­விட்­டது.

இதை­ய­டுத்து தனது எல்­லை­களை மூடி­யது ஏமன்.
ஒரு­நாட்­டில் போர் நடை­பெற்­றி­ருக்­கொண்­டி­ருக்­கும் போது, அந்த நாட்­டின் எல்­லை­களை மூடு­தல் பன்­னாட்­டுச் சட்­ட­திட்­டத்­துக்கு விரோ­த­மா­னது என்று ஐ.நா. சபை ஏற்­க­னவே எச்­ச­ரித்­தி­ருந்தது.

இந்த நிலை­யில், ‘எல்­லை­கள் மூடப்­பட்­ட­மை­யா­னது ஏம­னில் வர­லா­று­கா­ணாத உணவுப் பஞ்­சத்தை உண்­டு­ பண்ணும்’ என்று தற்­போது தெரி­வித்­துள்­ளது ஐ.நா. சபை.

 

You might also like