வடக்கில் 2,75,000 தென்­னை­கள் இல­வ­ச­மாக விநியாகம்

நடப்பு ஆண்­டில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மூன்று மாவட்­டத்­தி­லும் மொத்­த­மாக 2 லட்­சத்து 75 ஆயி­ரம் தென்­னை­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்­டுள்­ள­ன என தென்னை அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் வைகுந்­தன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தாது:
நடப்பு ஆண்­டில் குறித்த 3 மாவட்­டத்­தி­லும் 3 இலட்­சம் தென்னை விநி­யோ­கிக்­கத் திட்­ட­மி­டப்­பட்டு நாற்று மேடை­க­ளும் அமைக்­கப்­பட்­டன. இருப்­பி­னும் மேற்­கு­றித்த எண்ணிக்கைத் தென்­னங் கன்­று­களே மிகத் தர­மான கன்­று­க­ளாக இனம் காணப்­பட்­டன. எஞ்­சி­யவை சற்று தர­மற்­ற­வை­யாக கானப்­பட்­ட­மை­யி­னால் விநி­யோ­கம் செய்­யப்­ப­ட­வில்லை.

இந்த விநி­யோ­கம் விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்டு அத­ன­டிப்­ப­டை­யில் எமது இலக்குக்கு உட்­பட்டு விநி­யோ­கம் இடம்­பெற்­றது. இதே­நே­ரம் இதில் நேர­டி­யாக மக்­க­ளுக்கும் விநி­யோ­கித்த அதே­நே­ரம் மாவட்­டச் செய­ல­கம் உள்­ளிட்ட அரச திணைக்­க­ளங்­க­ளின் கோரிக்­கைக்­கும் அவை வழங்­கப்­பட்­டன.

அதில் மாவட்­டச் செய­ல­கங்­கள் பெற்ற தென்­னங்­கன்­று­க­ளில் அதி­க­மா­னவை பிர­தேச செய­ல­கங்­கள் ஊடாக மக்­க­ளுக்கே விநி­யோ­கம் செய்­யப்­பட்­டன. இதே நேரம் புதி­தாக தென்­னம் செய்­கையை மேற்­கொள்­ப­வர்­க­ளில் வறுமை நிலை­யில் இருப்­போரை ஊக்­கு­விக்­கும் திட்­டத்­தின் கீழ் 600 ஏக்­கர் நிலத்துக்கான குழு தோண்­ட­லிற்­கான கொடுப்­ப­ன­வை­யும் நாம் வழங்­கி­யி­ருக்­கின்­றோம்.

அந்த வகை­யில் ஒரு ஏக்­க­ருக்கு 41 தென்­னங் கன்­று­கள் நடமு­டி­யும். அந்த வகை­யி­லும் 24 ஆயி­ரத்து 500 தென்­னை­களை நட ஒரு குழிக்கு 100 ரூபா வீதம் 25 லட்­சம் ரூபா பண­மும் மானி­ய­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 250 ஏக்­க­ருக்­கும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 230 ஏக்­க­ருக்­கும், யாழ்ப்­பா­ணத்­தில் 120 ஏக்­க­ருக்­கும் இந்த மானி­யம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை இரா­ணு­வத்­தி­ன­ரும் தென்­னங் கன்­று­களை கோரி­ னர். மொத்­தம் 4 ஆயி­ரத்து 400 கன்­று­கள் படை­யி­ன­ருக்­கும் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள் ளது என்­றார்.

You might also like