கத்ரீனாவுக்கு முத்தமிட மறுத்தார் சல்மான் கான்

அலி அப்பாஸ் ஜாபர்கான் இயக்கும் ‘ஏக்தா டைகர்’ என்ற இந்திப் படத்தின் 2 ஆ-வது பாகம் ‘டைகர் ஜிந்தா ஹே’ தயாரிக்கப்பட்டு வருகிறது. படத்தில் சல்மான்கான் நாயகனாக நடித்து வருகிறார். சல்மான்கான் ஜோடியாக கத்ரீனா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகன் -நாயகிக்கு நெருக்கமான காதல் காட்சிகளும் இருக்கின்றன. இதில் சல்மான்கான், கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குனர் தயார் படுத்தி வைத்தார்.

படத்துக்கு அந்த காட்சியால் கூடுதல் விளம்பரம் கிடைக்கும். படம் பிரபலமாகும் என்று இயக்குனர் திட்டமிட்டு இருந்தார்.

இது பற்றி சல்மான்கானிடம் இயக்குனர் கூறினார். ஆனால், சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்து விட்டார். பலமுறை இயக்குனர் வற்புறுத்தி கூறியும், முத்தக்காட்சி வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டிசெம்பர் மாதம் படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like