Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

106 நோயாளிகளை கொலை செய்த தாதி

ஜேர்மனியைச் சேர்ந்த தாதி ஒருவர், பணி நேரத்தில் தனக்கு ஏற்பட்ட வேலைப்பளுவால், விச ஊசி போட்டு மருத்துவனையில் இருந்த 106 நோயாளிகளைக் கொலை செய்துள்ளார் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியைச் சேர்ந்த 41 வயதுடைய நீல்ஸ் ஹோகெல் என்பவர், 2005 ஆம் ஆண்டு ப்ரேமென் நகரில் உள்ள மருத்துவமனையில் கடமையாற்றிய போது, தேவையில்லாமல் ஒரு நோயாளிக்கு விச ஊசியை ஏற்ற முயற்சித்துள்ளார்.

அதனை அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மற்றொரு தாதி, இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய ப்ரேமென் நகர் மருத்துவமனையில் நோயாளிகள் இருவரை இவ்வாறு தாதி கொலை செய்தமை தெரிய வந்துள்ளது.

மேலும் 4 நோயாளிகளை அங்கு அவர் கொலை செய்ய முயற்சித்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீல்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். 2008 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அவருக்கு ஏழரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நீல்ஸ் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸாருக்கு பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுவரை அவரால் 106 பேர் கொலை செய்யப்பட் டுள்ளனர் என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நீல்ஸ் கூறுகையில், “உடல் உறுப்புகள் செயல் இழக்கக்கூடிய ஊசியை நோயாளிகளுக்குச் செலுத்தி, பின்னர் அவர்களைக் காப்பாற்றினால் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்ற நோக்கில் ஆரம்பித்தேன். மற்றவர்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும். பின்னர் எனக்கு ஏற்பட்ட வேலைப்பளுவால் இதுவே பழக்கமானது” எனத் தெரிவித்துள்ளார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.