ராணுவ தாக்குதலில் 26 பேர் சாவு

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு சிரியாவில் ஈராக் எல்லையில் அமைந்துள்ள அபு கமல் என்ற நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. கடந்த 9-ம் திகதி சிரிய ராணுவத்தினர் அந்த பகுதியில் நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து 40 வீதமான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்துதொடர்ந்து தாக்குதல் நடத்தி அந்த நகரை நேற்று முழுமையாக கைப்பற்றினர்.

இந்நிலையில், அந்நகரை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய ராணுவத்தினர் அப்பகுதியில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களை மக்கள் முகாம்களின் மீது நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் உள்ள சில முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது கட்டுப்பாடுக்குள் வைத்துள்ளதுடன் அந்த தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறன்றமை குறிப்பிடதக்கது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களை கைப்பற்றும் நோக்கத்தில் சில நேரங்களில் பொதுமக்களும் தாக்குதல்களில் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு தாக்குதலின் காரணமாகவே நேற்று குழந்தைகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சிரியாவில் நடந்துவரும் போரினால் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மக்கள் உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு சென்று உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

You might also like