அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­யாக 83 பேர் நிய­ம­னம்

இலங்­கை­யில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளில் 83 பேர் அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 11 பேர் சிறுப்­பான்­மை­யி­னத்­ததைச் சேர்ந்­த­வர்­கள். இவ்­வாறு தேசிய கொள்கை மற்­றும் பொரு­ளா­தார அலு­வல்­கள் அமைச்­சுத் தெரி­வித்­தது.

நேற்று நடை­பெற்ற நாடா­ளு­மன்ற அமர்­வில் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கப்­பட்­ட­ போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

“2010ஆம் ஆண்டு தொடக்­கம் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அரச தலை­வ­ரால் நிய­மிக்­கப்­பட்ட அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­கள் பெயர் பட்­டி­யல் ஒவ்­வொரு வரு­டங்­க­ளும் வெவ்­வே­றாக சமர்ப்­பிப்­பாரா?. அர­ச­த­லை­வர் சட்­டத்­த­ர­ணி­கள் பெய­ரி­டும் போது பின்­பற்­றப்­ப­டும் முறை­யி­யல் யாது?”- என்று பிமல் ரத்­நா­யக்க கேள்வி எழுப்­பி­னார்.

இந்­தக் கேள்­விக்கு தேசிய கொள்கை மற்­றும் பொரு­ளா­தார அலு­வல்­கள் அமைச்சு சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்­தி­ய பதி­லில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:-

இலங்­கை­யில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்­குள் 83 பேர் அர­ச­த­லை­வர் சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக் கப்­பட்­டுள்­ள­னர். 2010 ஆம் ஆண்­டில் 12 பேரும், 2011ஆம் ஆண்­டில் 2 பேரும், 2012ஆம் ஆண்­டில் 24 பேரும், 2013ஆம் ஆண்­டில் 2 பேரும், 2014ஆம் ஆண்­டில் 8 பேரும், 2015ஆம் ஆண்­டில் 2 பேரும், 2016ஆம் ஆண்­டில் 5 பேரும், நடப்­பாண்­டில் இது­வரை 28 பேரும் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் 11 பேர் சிறுப்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளா­கும்.

தவற விடாதீர்கள்:  பாலியல் சொற்களை அதிகம் தேடிய ஹோமாகம நகரம்!

இந்த பட்­டி­ய­லில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ சுமந்­தி­ரன் மற்­றும் அமைச்­சர் பைசர் முஸ்­த­பா­வும் உள்­ள­டங்­கு­கின்­ற­னர்.

அர­ச­மைப்­பின் 33 (2)( உ) சரத்­தின் பிர­கா­ரம் சட்ட உயர் தொழி­லில் பிர­ப­லம் அடைந்த உயர்ந்த நடத்­தை­க­ளைப் பேணி வந்­த­வர்­கள் அர­ச­த­லை­வர் சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­ம­னம் செய்யப்­ப­டு­வ­துடன் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தின் மேல­திக மன்­றாடி அதி­ப­திக்­காக நிய­மிக்­கப்­ப­டும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் சட்ட மா வரை­ஞர் பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக அர­ச­த­லை­வர் சட்­டத்­த­ர­ணி­கள் ஆகின்­ற­னர்.- என்­றுள்­ளது.

 

You might also like