இலங்கை வல்­ல­ரசு நாடா?

இலங்­கை­யும் சீனா போன்று வல்­ல­ர­சா­கி­விட்­டதா? பாது­காப்பு அமைச்­சுக்கு ஏன் அதிக நிதி ஒதுக்­கீடு செய்­கின்­றீர்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சீ.யோகேஸ்வ­ரன் தெரி­வித்­தார்.

வரவு -– செல­வுத் திட் டத்­தின் இரண்­டாம் நாள் விவா­தம் நாடா­ளு­மன்­றில் நேற்று இடம்­பெற்­றது. இந்த விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பாது­காப்பு அமைச்­சுக்கு கடந்த ஆண்­டை­ யும் விட­வும் 6.667 பில்­லி­யன் ரூபா அதி­க­மாக ஒதுக்­கப்­பட்­ட­மைக்­கான கார­ணம் என்­னவென கேள்­வி­யெ­ழுப்பி அதி­ருப்தியை வெளி­யிட்ட பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சீனா­போன்று இலங்­கை­யும் வல்­ல­ர­சா­கி­விட்­டதா என்­றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

­நாடா­ளுமன்­றத்­தில் நேற்று சனிக்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்­தின் மீதான இரண்­டாம் நாள் விவா­தத்­தில் கலந்துகொண்டு உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா ளு­மன்ற உறுப்­பி­னர் யோகேஸ்­வ­ரன் உரை­யாற்­றும்போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கை­யில் தெரிவித்ததாவது:

கூட்டு அர­சின் வரவு -– செல­வுத் திட்­டத்­தின் செல­வு­க­ளைப் பார்க்­கின்­ற­போது பாது­காப்பு அமைச்­சிற்­கான ஒதுக்­கீ­டானது ஏனைய அமைச்­சுக்­களை விட­வும் அதி­க­மா­க­வுள்­ளது. 2017ஆம் ஆண்டு வரவு -– செல­வுத் திட்­டத்­தில் பாது­காப்பு அமைச்­சுக்­காக 284 பில்­லி­யன்­கள் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. மொத்த நிதி­யில் 15.62 சத­வீ­த­மா­கும். தற்­போ­தைய வரவு – செல­வுத் திட்­டத்­தில் 290 பில்­லி­யன்­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. இது மொத்த நிதி­யில் 14 சத­வீ­த­மா­கும்.

கடந்த ஆண்­டை­விட இந்த ஆண்டு 6. பில்­லி­யன்­கள் கூடு­தாக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு அமைச்­சுக்கு இத்­த­கைய பெருந்­தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட வேண்­டுமா? இதன் மூலம் அரசு எதனை அடைய முயற்­சிக்­கின்­றது?

படித்த இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு தொழில்­கள் இல்லை. அவர்­கள் விரக்தி நிலை­யில் உள்­ள­னர். பாது­காப்பு அமைச்­சுக்கு அதி­க­மான நிதி ஒதுக்­கீடு செய்­வ­தால் இந்த நாட்­டில் விவ­சா­யம், கைத்­தொ­ழில், சேவைத்­துறை ஏதா­வது ஒன்று முன்­னேற்­றம் காணுமா?

2009ஆம் ஆண்டு போர் நிறை­வுக்கு கொண்­டு­வந்து விட்­டோம். போர் மௌனிக்­கப்­பட்டு விட்­டது என்று அறி­வித்த பின்­னர் இத்­த­கைய பெருந்­தொகை பணம் பாது­காப்பு அமைச்­சுக்கு ஏன் ஒதுக்­கீடு செய்­யப்­பட வேண்­டும். எமது நாடு சீனா போன்று வல்­ல­ர­சா­கி­விட்­டதா? – என்று கேள்வி எழுப்­பி­னார்.

You might also like