இலங்கையில் எரிபொருள் முச்சக்கரவண்டிகளை அறிமுகப்படுத்தத் திட்டம்

இலங்கையில் முழுமையாக இலத்திரனியல் வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய 1.5 மில்லியன் எரிபொருள் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு, இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு உரிமையாளராகும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இந்த முச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்துவதற்கு கடன் உதவியும் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 10 வீதத்தை மாத்திரம் செலுத்தி முச்சக்கரவண்டிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் தற்போது பயன்படுத்தும் எரிபொருள் மூலம் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளைப் பெற்றுக்கொள்ள பங்களாதேஷ் விருப்பம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் தற்போது பயன்பாட்டிலுள்ள முச்சக்கர வண்டிகளை பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

You might also like