துண்டான 9 சடலங்கள் டோக்கியோவில் மீட்பு!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்குப் பகுதியான ஸாமாவில் துண்டு துண்டான நிலையில் 9 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்று நேற்று வைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தபோதே அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் 2 மனித தலைகள் இருந்துள்ளன.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து பொலிஸார், வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போது நெஞ்சை உறைய வைக்கும் விதமாக அங்கு 9 சடலங்கள் இருந்துள்ளன. அதில் 8 பெண்களின் சடலங்களும் ஒரு ஆணின் சடலங்களாகும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சடலங்களைக் கைப்பற்றிப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிஸார் அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி (27) என்பவரைக் கைது செய்தனர்.

எனினும், வீட்டில் இருந்த சடலங்கள் தொடர்பான தெளிவான காரணங்களைப் பொலிஸார் கூறவில்லை.

இது குறித்து பேசிய ஷிராய்ஷி கூறும் போது ‘நான் அவர்களைக் கொன்றேன் மற்றும் ஆதாரங்கள் மறைக்கும் பொருட்டு உடல்களைத் துண்டு துண்டாக்கினேன்’ என்று கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான 23 வயது பெண் ஒருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

You might also like