டிரம்ப் – மோடி நாளை சந்திப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நாளை நடக்கவுள்ள 50-வது ஆசியான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

டொனால்டு டிரம்ப் தற்போது ஆசிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கிடையே மாநாட்டின் இடை வேளையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

அப்போது இருநாட்டு தலைவர்களும் பன்னாட்டு நிலவரம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். ரஷ்ய தலைமை அமைச்சர் டிமிட்ரி மெத்வதேவ், சீன தலைமை அமைச்சர் லீ கெ கியாங் மற்றும் வெளிநாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூட்ரேட்டையும் சந்திக்கவுள்ளார்.அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

அதில் பணமோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தங்களும் அடங்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது

தற்போதைய சூழ்நிலையில் டிரம்ப்-மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது 2-வது முறையாக மோடி டிரம்பை சந்திக்கிறார். தென்சீனக் கடல் தொடர்பாக தற்போது சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சீன தலைமை அமைச்சர் பிலிப்பைன்ஸ் வருவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

 

You might also like