ராணுவ உலங்கு வானூர்தி நொறுங்கி விழுந்து 7 பேர் சாவு

ஈராக் நாட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ உலங்கு வானூர்தி திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்

ஈராக் நாட்டில் ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ. -17 ரக ராணுவ உலங்கு வானூர்தி இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது கட் மாகாணத்தின் அருகே பறந்தபோது திடீரென உலங்கு வானூர்தி தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் உலங்கு வானூர்தி பயணம் செய்த இரண்டு விமானிகள் மற்றும் ஐந்து ராணுவ அதிகாரிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

You might also like