மரக்கறிகளின் இறக்குமதியை நிறுத்துமாறு கோரிக்கை

வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் உள்ளிட்ட மூன்று மரக்கறிகளினதும் இறக்குமதியை நிறுத்துமாறு, மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த மூன்று மரக்கறிகளும், உள்ளூரில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதால், பல சிக்கல்களுக்கு வியாபாரிகள் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இறக்குமதியை நிறுத்தும் சந்தர்ப்பத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் நன்மையடைவர்.

இதற்கு அரசு உரிய தீர்வைப் பெற்றுத் தராவிடில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றும் அந்தச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like