வேண்­டாமே தனி­யார் வகுப்­பு­கள்

அண்­மைக் காலங்­க­ளில் மிக உருப்­ப­டி­யான ஒரு கருத்தை, எதிர்­கா­லச் சந்­த­தி­யின் நலன் கருதி ஒரு அமைச்­சர் கூறி­யி­ருக்­கி­றார் என்­றால் அது விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் தயா­சிறி ஜய­சே­க­ர­தான். தனி­யார் வகுப்­புக்­களை (ரியூ­சன்­களை) தடை­செய்­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் அவர். நாடா­ளு­மன்­றத்­தில் வரவு – செல­வுத் திட்­டம் மீது உரை­யாற்­று­கை­யில் அவர் இந்த யோச­னையை முன்­வைத்­தார்.

பா டசா­லை­களை இலக்கு வைத்து நடை­மு­றைப்­ப­டுத்­த­ப் படும் நல்ல பல திட்­டங்­க­ளின் உண்­மை­யான பயனை அடை­ய­வேண்­டும் என்­றால் தனி­யார் வகுப்­புக்­களை இல்­லா­மல் செய்­ய­வேண்­டும், அல்­லது பாட­சா­லை­களை மூடி­விட்­டுத் தனி­யார் வகுப்­பு­களை மாத்­தி­ரம் நடத்­த­வேண்­டும். அது­வும் முடி­யாது போனால் தனி­யார் வகுப்­பு­களை நடத்­தும் சிறந்த ஆசி­ரி­யர்­க­ளைப் பாட­சா­லைக்­குள் ஈர்க்­க­வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அவர்.

உண்­மை­தான். தனி­யார் வகுப்­பு­க­ளின் ஆதிக்­கம் அளவு மீறிச் சென்­று­கொண்டே இருக்­கின்­றது. கல்­வி­யில் பின்­ன­டை­வுள்ள, மெல்­லக் கற்­கும் திறன்­கொண்ட பிள்­ளை­க­ளுக்கே முத­லில் தனிப்­பட்ட வகுப்­புக்­கள் தேவை­யாக இருந்­தன.ஆனால் இன்று நிலமை அப்­ப­டி­யல்ல. நன்­றா­கப் படிக்­கக்­கூ­டிய பாட­சா­லை­க­ளில் கல்­வி­யில் முன்­ன­ணி­யில் இருக்­கக்­கூ­டிய பிள்­ளை­கள்­கூட தனி­யார் வகுப்­பு­க­ளுக்­குச் செல்­லா­மல் கல்­வி­யில்லை என்று ஆகி­விட்­டது நிலமை.

பிள்­ளை­கள் தனி­யார் வகுப்­பு­க­ளில் கற்­றுக்­கொள்­கி­றார்­கள்­தானே என்ற அலட்­சி­யப்­போக்­கோடு பாட­சா­லை­க­ளில் கற்­றலை ஒழுங்­கா­கச் செய்­யாத ஆசி­ரி­யர்­க­ளை­யும் தன்­னி­டம் தனிப்­பட்ட வகுப்­புக்­க­ளுக்கு வர­வேண்­டும் இல்­லை­யேல் பரீட்­சை­யில் புள்­ளி­க­ளைக் குறைத்­து­வி­டு­வேன் என்று தனது பாட­சாலை மாண­வர்­க­ளையே மிரட்­டும் ஆசி­ரி­யர்­க­ளை­யும்­கூட இந்த தனி­யார் வகுப்­புக் கலா­சா­ரம் உரு­வாக்­கிக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில முன்­ன­ணிப் பாட­சா­லை­க­ளின் உயர் தரக் கல்­வி­யும் பெறு­பே­று­க­ளும் தனி­யார் வகுப்­புக்­களை நம்­பித்­தான் இருக்­கின்­றன என்­கிற அவ­லம்­கூட அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­ப­டிப் பாட­சா­லைக் கல்­வி­யையே பாழாக்­கும் மோச­மான பழக்­க­மாக தனி­யார் வகுப்­புக் கலா­சா­ரம் மாறி­விட்­டது. பாட­சா­லைக் கல்­விக்கு உத­வி­க­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட இந்­தத் தனி­யார் வகுப்­புக்­கள் இன்று உபத்­தி­ர­மாக மாறி நிற்­பது கண்­கூடு. வடக்­கில் குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்­தில் தனி­யார் வகுப்­பு­கள் எடுத்­தி­ருக்­கும் மற்­றொரு பரி­மா­ணம் இன்­னும் கவ­லைக்­கு­ரி­யது. இரவு 8 முதல் 9 மணி வரை­யும் இத்­த­கைய வகுப்­பு­கள் நடக்­கின்­றன. பிள்­ளை­கள் விளை­யா­டு­வ­தற்கோ மற்­றைய கல்­வி­சாரா பாட­சாலை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டவோ நேரம் இன்றி மாண­வர்­க­ளைப் பிழிந்­தெ­டுக்­கும் இந்தத் தனி­யார் வகுப்­புக் கலா­சா­ரம் பாட­சா­லைக் கல்வியை மட்­டும் பாதிக்­க­ வில்லை. அதை­யும் தாண்­டித் தன் தாக்­கத்­தைச் செலுத்­து­கி­றது.

தனி­யார் வகுப்­புக் கலா­சா­ரத்­தால் ஏற்­ப­டும் சமூக மற்­றும் பொரு­ளா­தா­ரத் தாக்­கம் மிக அதி­கம். மூன்று பிள்­ளை­க­ளைக் கொண்ட ஒரு சரா­ச­ரிக் குடும்­பத்­திற்கு ஆகும் தனி­யார் வகுப்­புக் கட்­ட­ணச் செலவு பெரும் பொரு­ளா­தா­ரச் சுமை. அத­னைச் சமா­ளிப்­ப­தற்கு அந்­தக் குடும்­பம் வேறு வரு­மான வழி­க­ளைத் தேட­வேண்­டி­யி­ருப்­ப­து­டன், வரு­மான அதி­க­ரிப்­புக்­காக ஓடி ஓடி உழைப்­ப­தில் கவ­னத்­தைக் குவிப்­ப­தால் குடும்­பம் மற்­றும் பிள்­ளை­கள் மீதான கவ­னம் குறை­கி­றது.

ஓடி ஓடி உழைக்­க­வேண்­டி­யி­ருப்­பது மட்­டு­மல்ல பிள்­ளை­களை இந்­தத் தனி­யார் வகுப்­பு­க­ளுக்கு ஏற்றி இறக்­கு­வ­தி­லேயே தாய் தந்­தை­ய­ரின் நேர­மும் சக்­தி­யும் பெரு­ம­ள­வில் விர­ய­மா­கின்­றன. வடக்கு கிழக்­கிலே இதை­யும் தாண்டி அரச உத்­தி­யோ­கத்­தில் இருப்­ப­வர்­கள், அதி­லும் கண­வன் மனைவி இரு­வ­ருமே அரச உத்­தி­யோ­கத்­தில் இருந்­து­விட்­டால் பிள்­ளை­க­ளின் தனி­யார் வகுப்­பு­கள் அவர்­க­ளின் வேலை நேரத்­தை­யும் காவு வாங்­கு­கின்­றன. அதன் மூலம் அரச அலு­வ­ல­கங்­க­ளின் செயற்­றி­ற­னை­யும் பாழாக்­கு­கின்­றன.

இப்­படி எல்லா வழி­க­ளி­லும் கடும் நெருக்­கு­த­லைக் கொடுக்­கும் தனி­யார் வகுப்­புக்­களை இல்­லா­தொ­ழிப்­பதே சிறந்­தது. அதன் மீது அரசு கவ­னம் செலுத்­து­வது மிக மிக அவ­சி­யம். அதே­நே­ரத்­தில் நாட்­டின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கும் சிற்­பி­கள் என்ற வகை­யில் பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளின் வகி­பா­க­மும் முக்­கி­யத்­து­வம் உண­ரப்­ப­டு­வ­தும் அவ­சி­யம். அவர்­க­ளில் பல­ரால் இன்று அரச பாட­சா­லை­யில் பெறும் சம்­ப­ளத்­தி­லும் பார்க்க தனி­யார் வகுப்­பு­க­ளின் மூலம் அதி­கம் சம்­பா­திக்க முடி­கி­றது.

இத்­த­கைய பரி­தாப நிலை­யில் ஆசி­ரி­யர்­கள் இருக்­கும்­போது வெறும் சட்­டங்­க­ளால் மட்­டும் தனி­யார் வகுப்­பு­களை ஒழித்­து­விட முடி­யாது. முத­லில் ஆசி­ரி­யர்­க­ளின் சம்­ப­ளங்­களை ஏனைய தொழிற்­து­றை­க­ளி­லும் பார்க்க அதி­க­மா­ன­தாக்கி, ஆசி­ரி­யத் தொழிலை சமூக மதிப்பு மிக்­க­தாக மாற்ற அரசு முன்­வ­ர­வேண்­டும். அதன் மூலமே சிறந்த ஆசி­ரி­யர்­க­ளை­யும் சிறந்த பாட­சா­லைக் கல்­வி­யை­யும் மீண்­டும் உரு­வாக்க முடி­யும்.

You might also like