இளைய தலைமைகளை உருவாக்கிப் பார்ப்போமே

உள்ளூராட்சித் தேர்தல் வெகுவிரைவில் இடம்பெற இருக்கிறது. தெற்கைப் பொறுத்தவரை அரசியல் என்பது மக்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டுள்ளது. குறிப்பாக அரசியல் குறித்த ஆர்வமும்– அச்சமற்ற தன்மையு।ம் காணப்படுவதால் இளையோர் மத்தியில் அரசியல் ஈடுபாடு அதிகரித்துள்ளது.

ஆனால் வடக்கில் அரசியல் ஆர்வம் குறைந்தே காணப்படுகிறது. சமூகப் பொறுப்பு, அக்கறை என்பவை ஒருபுறம் குறைவடைந்து, எவரானாலும் சரி தேர்தலில் போட்டியிடட்டும். ஏதோ ஒப்புக்காக யாரோ சிலருக்கு வாக்களிப்போம்.

நமக்கென்ன என்ற அலட்சியமும், மறுபுறத்தில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் உள்ள அச்ச நிலையும் ஒரு தடையாகவே உள்ளது. இதனால் ஆர்வம் இருந்தாலும் அச்சம் காரணமாக எம்மில் பலரும் எமக்கேன் வம்பு? என ஒதுங்குகின்றனர்.

உண்மையில கடந்தகால அரசியல் வன்முறைகள் குறித்து இரைமீட்டுப் பார்த்தால் அத்தகை அச்சமோ, தயக்கமோ நியாயமானதென்றே தோன்றும்.
ஆனால் தற்போது சனநாயக உறுதிப்பாடு, கருத்துச் சுதந்திரம், நல்லாட்சி என்றதொரு அமைதிநிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், அச்சமற்ற சூழல் வெளிப்படுத்தப்பட்டு பொதுவாழ்வில் நேர்மையுடன் ஈடுபட இளையோரை ஊக்குவிக்க வேண்டும்.

அரசு உட்பட பாதுகாப்புத் தப்பினர் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவண்ணம் தமது இதயசுத்தியுடனான நல்லெண்ணத்தை உறுதிப்படுத்த வேண்டும். பேச்சளவில் இளையோர், அதுவும் பெண்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு என்பது அரசியலுக்கு வாருங்கள். வந்து பாருங்கள் என்பது போல காலச்சூழல் நிலவுகிறது.

வேலையின்மை, சமூகசேவைகளில் ஆர்வம் என்பவை எம்மவர்கள் மத்தியில் இருப்பினும் களச் சூழ்நிலை நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தகிறது. இதனை உரிய தரப்புக்கள் கவனத்தில் எடுத்து நாளைய தலைமைகள் உருவாகி வளர ஊக்கப்படுத்த வேண்டும்.

நா.துஷாந்,
வரணி.

You might also like