இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தனுடனான நேர்காணல்

பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம்   மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது’’  என இலங்கை மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் அம்­பிகா சற்­கு­ண­நா­தன் தெரிவித்தார்.
‘சுடர் ஒளி’ பத்திரிகைக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்வியின் போதே அவர் இந்­தக் க­ருத்­துக்­க­ளைத் தெரி­வித்­தார்.

கேள்வி: சித்­தி­ர­வ­தை­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­வ­தாக முறைப்­பா­டு­கள் வந்­து­ கொண்டே இருக்­கின்­றன. நீங்­கள் மனித உரி­மை­ கள் ஆணைக்­கு­ழு­வில் இணைந்து இரண்டு வரு­டங்­கள் ஆகி­விட்­டன. இந்­தக்­கா­லப்­ப­கு­தி­யில் சித்­தி­ர­வ­தை­களை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை ஏதாவது எடுக்­கப்­பட்­டதா? அது தொடர்­பான புள்­ளி­வி­வரங்­கள் ஏதே­னும் உங்­க­ளி­டம் இருக்­கின்­றதா?

பதில்: எமக்­குத் தரப்­பட்ட புள்­ளி­வி­வரங்­க­ளின் படி 30 அதி­கா­ரி­கள் குற்றவாளி­க­ளாக இனங் காணப்பட்டுள்ளனர். 18 அதி­கா­ரி­கள் நிர­ப­ரா­தி களாகவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­னர். 59 வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் தொடர்ந்­தும் இடம்­பெற்­றுக்கொண்­டி­ ருக்­கின்­றன.  இவற்­றைத் தவிர சித்­தி­ர­வ­தை­யில் ஈடு­பட்­ட­  குற்­றச் சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்ட  100 அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணை­ க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்­து­வ­ருகின்றனர் என்று எமக்குக் கூறப்­பட்­டது. இவற்­றையே உங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ள­மு­டி­யும்.

கேள்வி: இதிலே சில நாள்களுக்கு முன்­பாக ‘அஸோ­ஸி­யே­டற் பிரஸ்’ செய்­திச் சே­வை­யால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட சித்­தி­ர­வ­தை­ க­ளும் உள்­ள­டக்­கு­கின்­றனவா?

பதில்: நீங்­கள் கூறும் ‘அஸோ­ஸி­யே­டற் பிரஸ்’ அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குற்­றச் சாட்­டுக்­கள் இது­வ­ரை­யில் முறைப்­பா­டு­க­ளாக எமக்கு வர­வில்லை. ஆனால் இந்த முறைப்­பா­டு­ கள் எமக்கு மேற்­கொள்­ளப்­பட்­டால்  அல்­லது அந்த அறிக்­கையை தயா­ரித்­த­வர்­கள் எம்­மு­டன் வந்து தக­வல் பரி­மா­றிக்­கொண்­டால் நிச்­ச­ய­மாக அதனை விசா­ர­ணை­செய்து  தேவை­யான நட­வ­டிக்கை எடுப்­பது எமது கட­மை­யா­கும்.

கேள்வி:அண்­மை­யிலே இலங்­கைக்குப் பய ணம் மேற்­கொண்ட ஜுன் லம்­பேர்ட் தலை­மை­யி­லான ஐரோப்­பிய நாடாளு­மன்­றத் தூதுக்­கு­ழு­வி­னர் ஒரு ஊட­க­வி­ய­லா­ளர் மாநாட்டை நடத்­தி­யி­ருந்­த­னர். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வது தொடர்­பாகத் தாம் கடந்­தாண்டு இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் இதுவரை நிறை­வேற்றப்­ப­ட­வில்லை. அத­னால் தாம் மிகுந்த கவ­லை­கொண்­டி­ருப்­ப­தாக   அவர்கள் குறிப்­பிட்டார்கள். இந்த விட­யத்­திலே மனித உரிமை ஆணைக்குழு என்­ன­செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது? இது விட யத்தில் நீங்­கள் எடுக்­கும் நட­வ­டிக்கை என்ன?

பதில்: பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டம் கட்­டா­ய­மாக நீக்­கப்­ப­ட­வேண்­டும். ஏனெ­னில் அந்­தச் சட்­டம்   மனித உரிமை மீறல்­கள் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­ற­தொரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. உதா­ர­ண­மாக அந்­தச் சட்­டத்­தின் கீழ் நீதி­ப­தி­ யொ­ரு­வ­ருக்கு முன்­பாக முன்­னி­லைப்­ப­டுத் தப்­ப­டா­மலேயே ஒரு­வர் 18 மாதங்­கள் தடுத்­து­வைக்­கப்­ப­ட­லாம். சாதா­ரண சட்­டத்­தின் கீழ் நீதி­ப­தி­யொ­ரு­வ­ ருக்கு முன்­னர் மாத்­தி­ரமே ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பெற­மு­டி­யும். அது நீதி­மன்­றத்­தா­லும் ஏற்­கப்­ப­டும். ஆனால் பயங்­க­ர­வாத தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை உத­விப் பொலிஸ் பரி­சோ­த­கர் அன்­றேல் அவ­ருக்கு மேலுள்ள அதி­கா­ரி­கள் எவ­ரும் பெற்­றுக்­கொள்­ளும் நிலை­யி­லேயே அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­ல­மா­னது நீதி­மன்­றத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டும். ஆகை­யால் அந்­த­மா­தி­ரி­யான ஒரு  சட்­டம் இருக்­கும் நிலை­யில், அது   சித்­தி­ர­வதைகளைச்  செய்­வ­தற்குச் சாத­க­மான ஒரு சூழ் நி­லையை  ஏற்­ப­டுத்­து­கின்­றது.  ஏனெ­னில் அந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டக்­கூ­டும். ஆகை­யால்தான்  தற்­போ­துள்ள பயங்­க­ர­வா­தத் தடுப்­புச் சட்­டம் பன் னாட்டு மனித உரி­மைச் சட்­டங்­க­ளுக்கு ஏற்ப அமை­ய­வில்லை. ஆகை­யால் அந்­தச் சட்­டத்தை நீக்­க­வேண்­டும் என்று மனித உரி­மை­கள் ஆணைக் குழு திட்­ட­வட்­ட­மாக உறு­தி­ப­டக் கூறி­ யுள்­ளது. இதனை வலி­யு­றுத்தி நாம் தலைமை அமைச்சருக்கு எழு­தி­யி­ருக்­கின்­றோம். அத்­தோடு பகி­ரங்க அறிக்­கை­க­ளை­யும் விடுத்­தி­ருக்­கின் றோம். எமது இணை­யத்­த­ளத்­தில் சென்று இவற்றை நீங்­கள் பார்வை யிட ­மு­டி­யும். பயங்­க­ர­வாதத் தடுப்­புச் சட்­டத்தை நீக்க வேண்­டும் என்­பதே எமது பரிந்­துரை.

கேள்வி: கடந்த இரண்­டு­வ­ரு­ட­கால உங்­கள் அனு­ப­வத்­தின்படி, மனித உரி­மை­யைப் பேணு­கின்ற­ விட­யத்­தில் இந்த அர­சு உண்­மை­யான உறு­திப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் காண்­கின்­றீர்­களா? அன்­றேல் கண்­து­டைப்­புக்­காக நிறு­வ­னங்­களை அமைத்து வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­து­விட்டு இருந்­து­வி­டு­கின்­ற­தென எண்­ணு­கின்­றீர்­களா?

பதில்: மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வைப் பொறுத்­த­வரை நாம் ஒரு சுயா­தீ­ன­மான ஆணைக்­குழு. ஆகை­யால் நாம் சுயா­தீ­ன­மா­கவே செயற்­ப­ட­வேண்­டும். சுயா­தீ­ன­மா­ கவே செயற்­ப­டு­கின்­றோம். இப்­போ­துள்ள மாற்­ற­மாக நாம் கண்­ட­தென்­ன ­வெ­னில், தற்­போது பேச்­சுச்­சு­தந்­தி­ரம் உள்­ளது. அரசு மேற்கொள்ளும் குறை­நி­றை­ களை, சரி, பிழை­க­ளைச் சுட்­டிக்­காட்­டு ­வ­தற்­கான  சுதந்­தி­ரம் உள்­ளது.  அத­னைத்­த­விர அர­சு மேற்கொள்ளும் அல்­லது அர­சி­யல்­யாப்பை அல்­லது மனித உரிமை ஆணைக்­குழு போன்ற நிறு­வ­ னங்­க­ளைக் கூட சீர்­தி­ருத்தி அமைப்­பது என்­பது  சுல­ப­மான காரி­ய­மல்ல. ஏனெ­னில் பத்­து­வ­ரு­ட­கா­லம் சர்­வா­தி­கார  அரசு இருந்த பின்­ன­ணி­யிலே  ஒரு கலா­சா­ரம் உரு­வா­கும். அதா­வது சட்­டத்தை மதிக்­கத் தேவை­யில்லை, மனித உரி­மை­மீ­றல்­களை நாம் இழைக்­க­லாம் , இழைத்­தா­லும் சட்­டத்­தி­லி­ருந்து நாம் தப்­பிக்­கொள்­ள­லாம் என்ற மனப்பாங்கு மேலெழும். ஆகை­யால் அந்­த­மா­தி­ரி­யான கலா­சா­ரத்தை மாற்­று­வ­தென்­பது  இல­கு­வா­ன­தல்ல. மனித உரிமை ஆணைக் கு­ழு­வைக் கூட  சில பேர் மட்டுமன்றி சில அர­ச­நி­று­வ­னங்­களைச் சேர்ந் தோர் கூட தமது எதி­ரி­யா­கவே பார்க்­கின்­ற­னர்.  பார்க்­கக்­கூ­டும். ஏனெ­னில் மனித உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் விட­யத்­தில் அரசு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றதா என்­பதை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு கண்­கா­ணித்து,  அரசு செய்­யும் பிழை­க­ளைச் சுட்­டிக் காட்டி சரி­யான வழி­யில் பய­ணிக்­கப்  பரிந்­து­ரை­கள் வழங்­கு­வ­து­தான் எமது கடமை.  ஆகை­யால் நாம் எம்மை எதி­ரி­யா­கப் பார்க்­க­வேண்­டாம் என்றே நாம் அரச நிறு­வ­னங்­க­ ளுக்குக் கூறு­கின்­றோம். இலங்­கை­யி­லுள்ள அனை­வ­ரது மனித உரி­மை­க­ளை­யும் பேணு­வதை உறு­திப்­ப­டுத்­து­ வதே எமது கடமை. எங்­க­ளைப் பொறுத்­த­வரை எந்த அர­சும் எப்­போ­தும் எல்­லா­ நே­ரத்­தி­லும் மனித உரி­மை­களை மதிப்­ப­தில்லை. அவர்­கள் மதிக்­கா­மல் சட்­டத்துக்கு மாறாகச் செயற்­ப­டும் போது கட்­டா­ய­மாக நாங்­கள் குரல் எழுப்ப வேண்­டும்; சுட்­டிக் காட்­ட­வேண்­டும்; பரிந்­து­ரை­களை வழங்­க­வேண்­டும்.

கேள்வி:உங்­களை எதி­ரி­யா­கப் பார்க்­க­ வேண்­டாம்  என்று கடந்த கேள்­விக்­கான பதி­லில் கூறி­னீர்­கள்.  கடந்த அரசில் மனித உரி­மைக்­காக குரல் எழுப்­பி­ய­வர்­க­ளைத் துரோ­கி­களாக அடை­யா­ளம் காட்­டிய காலப்­ப­குதி இருந்­தது. தொலைக் காட்­சி­க­ளில் முகங்­க­ளைக் காண்­பித்து இவர்­கள் துரோ­கி­கள் எனக்­கூ­றி­னர். இந்­தப் போக்கை எப்­படி மாற்­றி­ய­மைக்­க­மு­டி­யும்?

பதில்: இது கடி­ன­மான கேள்வி. அரச உத்­தி­யோ­கத்­தர்­கள், பொலி­ஸார் மற்­றும் பொது­மக்­கள் மத்­தி­யில் மனித உரி­மை­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது மனித உரிமை ஆணைக்­கு­ழு­வின் கட­மை­க­ளி­லொன்­றா­கும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் எடுக்­கின்­றோம். ஆனா­லும் அந்த நட­வ­டிக்­கை­கள் போதாது. ஏனெ­னில் பத்­து­வ­ருட கால­மாக( மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் ) மனித உரி­மை­க­ளைப் பற்­றிக் கதைத்­தால் எமது தேசி­யப் பாது­காப்­புக்கு எதி­ரான ஒரு நட­வ­டிக்­கை­யாக க் கரு­தப்­ப­டத்தக்க நிலை நிலவியது. அல்­லது குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கின்ற ஒரு நட­வ­டிக்­கை­யா­கக் கரு­தப்­ப­ட­ நேர்ந்தது. அரசை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கக் கண்­டு­கொள்­ளப்படும் நிலை இருந்தது. ஆகை­யால் அந்த மாதி­ரி­யான கலா­சா­ரத்தை, மன­நி­லையை மாற்­று­வ­தென்­பது  இல­கு­வா­ன­தல்ல. நாம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் எத்­த­னையோ நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றோம்.  ஆனா­லும் அவை இல­கு­வான விட­யங்­க­ளல்ல.

கேள்வி:காணா­மல்­போ­னோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­பது தொடர்­பான சட்­டம் கடந்­தாண்டு ஓகஸ்ட் மாதத்­தில் நிறை­வேற்­றப்­பட்டு, நீண்ட நாள்­கள் இழு­ப­றிக்­குப் பின்­னர் அரச தலைவர் அந்த சட்­டத்­தில் கையொப்­ப­மிட்­டி­ருந்­த­போ­தி­லும் அந்த அலு­வ­ல­கம் இன்­ன­மும் இயங்­கு­வ­தைக் காண­மு­டி­ய­வில்லை. இந்த விட­யத்­திலே உங்­க­ளு­டைய பார்வை எப்­படி இருக்­கின்­றது?

பதில்: அந்த அலு­வ­ல­கத்­துக்கு உறுப்­பி­னர்­க­ளைத் தெரி­வு­செய்து நிய­மிப்­ப­ தற்­காக இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் விளம்­ப­ரம் செய்­யப்­பட்­டது. சிவில் நிறு­வ­னங்­கள் ஆள்­களை பிரே­ரிக்க முடி­யும். அல்­லது அதில் அங்­கத்­த­வர்­க­ளாக விரும்­பு­வோர் விண்­ணப்­பங்­க­ளைச் சமர்­பிக்க முடி­யும்.  அதற்கு பிறகு அர­சி­யல்­யாப்பு பேரவை பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய  அவர்­கள் நிய­மிக்­கப்­ப­டு ­வார்­கள். அதற்கு நிய­மிக்­கப் ப­டும் உறுப்­பி­னர்­கள்  மனித உரிமை விட­யங்­க­ளில் தேர்ச்­சி­யுள்­ள­வர்­க­ளா­க­வும், சுயா­தீ­ன­மா­ ன­வர்­க­ளா­க­வும்,  காணா­ ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளு ­டன் இணைந்து பணி­யாற்­றி­ய­வர்­க­ளா­க­வும் இருப்­பது மிக­ முக்­கி­ய­மா­கும். ஏனெ­னில் இது ஒரு புது அமைப்பு.  இதன் செயற்­பா­டு­கள் சீராக நடை­பெ­று­வ­தற்கு  அதன் உறுப்­பி­னர்­க­ளின் பங்­க­ளிப்பு மிக முக்­கி­யமா­கும்.  பிழை­யான அங்­கத்­த­வர்­களை நிய­மித்­தால் அந்த நிறு­வ­னம் இயங்­கப்­போ­வ­தில்லை.  இந்­த­மா­தி­ரி­யான நிறு­வ­னங்­கள் இயங்­கு­வ­தற்கு சில­மா­தங்­கள், சில வேளை ஒரு­வ­ரு­ட­மா­வது எடுக்­கும். ஏனெ­னில் பிராந்­தி­யங்­க­ளில் அலு­வ­ல­கங்­க­ளைத் திறக்க வேண்­டி­யுள்­ளது. தேர்ச்­சி­யான நிபு­ணர்­க­ளைக் கொண்­டு­வ­ர­வேண்­டி­யி­ருக்­கும். சரி­யான அங்­கத்­த­வர்­களை நிய­மிப்­பதே மிக­முக்­கி­ய­ மா­ன­வி­ட­ய­மா­கும்.  அது சரி­யாக சீராக செயற்­ப­டு­கின்­றதா என்­பதை அதற்­குப் பின்­னர் தான் நாங்­கள் நிச்­ச­யப்­ப­டுத்த முடி­யும்.

கேள்வி: மனித உரிமை ஆர்­வ­லர்­கள், காவ­லர்­கள் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாக ஐநா­வில் கூட முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது. அவர்­க­ளு­டைய பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்கு,  அவர்­கள் தொடர்ந்­தும் பணியை துணி­க­ர­மாக முன்­னெ ­டுப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு  மனித உரி­மை­கள் ஆணைக்­குழு என்­ற­வ­கை­யில் நீங்­கள் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன?

பதில்: மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்­குப் பத்து பிராந்­திய அலு­வ­லர்­கள் உள்­ள­னர் . கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் மனித உரிமை ஆர்­வ­லர்­கள் மற்­றும் சிவில் சமூ­கத்­தி­னர் எம்­மி­டம் வந்து முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.  சில வேளை­க­ளில் பாது­காப்­புச் சேவை­யில் இருப்­ப­வர்­கள் எமது அலு­வ­ல­கங்­க­ளுக்கு வந்து தக­வல்­கள் கேட்­கின்­ற­னர் என்று முறைப்­பா­டு­கள் மேற்­கொண்­டி­ருக்­கின்­ற­னர். அப்­படி மேற்­கொள்­ளும்­போது நாம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றோம். அவர்­க­ளுக்கு தேவை­யான பாது­காப்­பா­ன­தொரு சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக தன்­னால் இய­லு­மான  அளவு முயற்­சி­ களை மனித உரிமை ஆணைக்­குழு எடுத்­தி­ருக்­கின்­றது. ‘‘எந்­தப்­பி­ரச்சினை இருந்­தா­லும் தய­வு­ செய்து மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வுக்கு  முறைப்­பாடு செய்­யுங்­கள்’’ என நாம் சிவில் சமூ­கத்­தி­னர் மற்­றும் மனித உரி­மை­கள் ஆர்­வ­லர்­க­ளுக்கு கூறு­கின்­றோம்.  பிராந்­தி­யங்­க­ளில் என்ன நடக்­கின்­றது என்று தெரிந்­தால் மட்­டுமே  நாம் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்க முடி­யும். எங்­க­ளு­டைய செயற்­பாடு சரி­யாக இல்­லா­வி­டின், அவர்­கள் எம்­மி­டம் கேள்வி கேட்­க­லாம். கேள்­வி­ கேட்க வேண்­டும். ஏனெ­னில் அது அவர்­க­ளின் உரி­மை­யா­கும். அப்­போ­து­தான் மனித உரிமை ஆணைக் கு­ழு­வும் சரி­யா­கச் செயற்­ப­ட­மு­டி­யும்– என்றார்.

You might also like