கொழும்­புத்­துறை இந்து மகா வித்­தி­யா­ல­ய பரி­ச­ளிப்பு விழா

யாழ்ப்பாணம் கொழும்­புத்­துறை இந்து மகா வித்­தி­யா­ல­ யத்­தின் தவத்­திரு யோகர் சுவா­மி­கள் ஞாப­கார்த்த பரி­ச­ளிப்பு விழா கடந்த சனிக்கி­ழமை யோகர் சுவா­மி­கள் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.

வித்­தி­யா­லய அதி­பர் கே. தவ­கீஸ்­வ­ரன் தலை­மை­யில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ ன­ராக யாழ்ப்­பாண மாவட்ட வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் என்.கன­க­ரட்­ணம் விந்­த­னும் சிறப்பு விருந்­தி­ன­ராகப் பிர­தேச கல்வி அதி­காரி எஸ். தேவ­கு­மா­ர­னும் கலந்து சிறப்­பித்­தி­ருந்­த­னர்.

நிகழ்­வில் கல்வி, விளை­யாட்டு, அடை­வு­மட்­டம், அபி­வி­ருத்தி என கல்­வி­சார் செயற்­பா­டு­க­ளில் முதன்மை நிலை பெற்ற மாண­வர்­கள் அனை­வ­ரும் பரி­சில்­கள் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.

You might also like