வேலணை மேற்கு நடராஜா வித்தியின் பரிசளிப்பு விழா
தீவகக்கல்வி வலயம், வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் வாசுகி செல்வரட்ணம் தலைமையில் கடந்த சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்க ளாக பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஞானசோதியன் தம்பதியினரும் மதிப்புறு விருந்தினர்களாக பாடசாலையின் பழைய மாணவிகளான ம.ரோகினி, தி.ஜெயந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்கள் விருந்தி னர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன. வடக்கு மாகாணசபை உறுப்பி னருடன், விருந்தினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.