மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 85 ஆவது ஆண்டு விழா

யாழ்ப்­பா­ணம், மீசாலை விக்­னேஸ்­வரா மகா வித்­தி­யா­லய பழைய மாண­வர் ஆசி­ரி­யர் சங்க பிரான்ஸ் கிளை­யின் ஏற்­பாட்­டி­ல் வித்­தி­யா­லயத்தின் 85 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் வித்­தி­யா­லய கார்த்­தி­கேசு அரங்­கில் நடை­பெற்­றது.

வித்­தி­யா­லய அதி­பர் சு.சிவா­னந்­தன் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ ராக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கேச­வன் சயந்­த­னும் சிறப்பு விருந்­தி­ன­ராக தென்­ம­ராட்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் சு.சுந்­த­ர­சி­வ­மும் கலந்து கொண்­ட­னர்.

நிகழ்­வில் வித்­தி­யா­ல­யத்­தில் கட­மை­யாற்றி ஓய்வு பெற்ற 7 அதி­பர்­க­ளும் ஆறு ஆசி­ரி­யர்­க­ளும் பிரான்ஸ் கிளை­யி­னர் சார்­பில் பொன்­னாடை போர்த்தி மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.

அத்­து­டன் மீசாலை மக்­கள் ஒன்­றி­யத்­தின் கன­டாக் கிளை­யி­ன­ரால் பொரு­ளா­தார நிலை­யில் பின்­தங்­கி­யுள்ள மாண­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் தரம் ஒன்­றில் இணைந்­துள்ள மற்­றும் இணை­ய­வுள்ள மாண­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் சைக்­கிள் வழங்­கி­னர்.

 

You might also like