மூலிகை சட்னி

தேவையானவை:

வல்லாரைக் கீரை
புதினா இலை – தலா ஒரு கப், கொத்தமல்லி இலை – அரை கப், கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப,
சின்ன வெங்காயம் – 10,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப் பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.

 

You might also like