கிளிநொச்சியில் 17,111 விவசாயிகளுக்கு ரூ.308.8 மில்லி. மானியம்

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 17 ஆயி­ரத்து 111 விவ­சா­யி­க­ளால் 2017–2018 ஆம் ஆண்டு கால­போ­கத்­தில் 59 ஆயி­ரத்து 400 ஏக்­க­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 308.8 மில்­லி­யன் ரூபா மானி­யம் விவ­சா­யி­க­ ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தாக மாவட்ட கம­நல சேவைத் திணைக்­கள ஆணை­யா­ளர் ஆய­கு­லன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் 8 கம­நல சேவை நிலை­யங்­க­ளின் ஊடா­கவே குறித்த எண்­ணிக்கை விவ­சா­யி­கள் நெற்­செய்­கையை மேற்­கொண்­டுள்­ள­னர்.

அதன் பிர­கா­ரம் கிளி­நொச்சி கம­நல சேவை நிலையத் தின் கீழ் 5 ஆயி­ரத்து 054 விவ­சா­யி­க­ளால் 7 ஆயி­ரத்து 932 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 99.15 மில்­லி­யன் ரூபா­வும், இரா­ம­நா­த­பு­ரம் கம­நல சேவை நிலை­யத்­தின் கீழ் ஆயி­ரத்து 312 விவ­சா­யி­க­ ளால் ஆயி­ரத்து 558.3 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 19.5 மில்­லி­யன் ரூபா­வும், புளி­யம் பொக்­கனை கம­நல சேவை நிலை­ யத்­தின் கீழ் 2 ஆயி­ரத்து 637 விவ­சா­யி­க­ளி­ னால் 4 ஆயி­ரத்து 532 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 56.5 மில்­லி­யன் ரூபா­வும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இதே­போன்று அக்­க­ரா­யன் கம­நல சேவை நிலை­ யத்­தின் கீழ் ஆயி­ரத்து 635 விவ­சா­யி­க­ளி­னால் 2 ஆயி­ரத்து 94.5 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 26 மில்­லி­யன் ரூபா­வும், முழங்­கா­வில் கம­நல சேவை நிலை­ யத்­தின் கீழ் 862 விவ­சா­யி­க­ ளி­னால் 908.5 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 11 மில்­லி­யன் ரூபா­வும், பூந­கரி கம­நல சேவை நிலை­யத்­தின் கீழ் 2 ஆயி­ரத்து 900 விவ­சா­யி­க­ளி­ னால் 4 ஆயி­ரத்து 68.4 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 50 மில்­லி­யன் ரூபா­வும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

அதே­போன்று பளை கம­நல சேவை நிலை­யத்­தின் கீழ் 706 விவ­சா­யி­க­ளி­னால் 656.8 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 8 மில்­லி­யன் ரூபா­வும், உருத்­தி­ர­பு­ரம் கம­நல சேவை நிலை­யத்­தின் கீழ் 2 ஆயி­ரத்து 5 விவ­சா­யி­க­ளி ­னால் 2 ஆயி­ரத்து 957.9 கெக்­டே­ய­ரில் மேற்­கொள்­ளும் நெற்­செய்­கைக்­காக 37 மில்­லி­யன் ரூபா­வும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. எனவே மொத்­த­மாக 308.8 மில்­லி­யன் ரூபா வழங்­கப்­ப­ட­வுள்­ளது. என்­றார்.

You might also like