Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வவுனியா நகரப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரிப்பு

வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதையடுத்து சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் பின்னடித்து வருகின்றதுடன் செல்கின்றவர்களும் மாலை 5 மணியளவில் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.

வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவினைச் சுற்றிய பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறித்த பூங்காவினை கேள்வி கோரல் மூலம் பெற்றுக் கொண்டவர்கள் நுளம்பு பெருக்கெடுப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் நுளம்பு பெருக்கெடுக்கின்றது.

மாலை 6 மணியளவில் பூங்காவினைப் பூட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் சிறுவர்கள், பெற்றோர்கள் பொழுதைக் களிப்பதற்காக அங்கு செல்வதுண்டு. தற்போது செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

நுளம்பைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், நகரசபைப் பரிசோதகர்கள் அக்கறையற்ற நிலையில் இருப்பதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ள னர்.
சுகாதாரப் பரிசோதகர்கள் நுளம்பு பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் புகையை வைத்தியசாலையை அண்டிய பகுதியிலும் வைத்தியர்கள், தாதியர்கள் குடியிருக்கும் பகுதியை அண்டிய பகுதியிலுமே வீசிவருவதாகவும பூங்காவினைச் சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கடந்த சில வாரங்களாக பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக மாலை நேரங்களிலும் காலை வேளைகளிலும் நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. டெங்குத் தாக்கம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.