கவனிப்பாரற்று செருக்­கப்­பு­லம் வீதி- சீர­மைக்குமாறு மக்­கள் கோரிக்கை

செல்­வா­பு­ரம் செருக்­கப்­பு­லம் சாலை­யா­னது மிக நீண்ட நாள்­க­ளாக சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­வ­தா­க­வும் அதனைச் சீர­மைத்­துத் தரு­மா­றும் கிராம மக்­கள் கேட்­டுக் கொள்­கின்­ற­னர்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் வலி வடக்குப் பிர­தே­சத்துக்கு உட்­பட்ட செல்­வா­பு­ரம் செருக்­கப்­பு­லம் வீதி­யா­னது மிக நீண்ட நாள்­க­ளாக சீர­மைக்­கப்­ப­டாது காணப்­ப­டு­கின்­றது.

மீள்­கு­டி­யேற்­றம் செய்­யப்­பட்ட காலத்­தில் இருந்து இன்று வரை அவை சீர­மைக்­கப்­ப­ட­ வில்லை. இரா­ணு­வத்­தின் மண் அணை­கள் காணப்­பட்­ட­மை­யால் வீதி குன்­றும் குழி­யு­மாக காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாக பிர­தேச சபைச் செய­லா­ள­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யும் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கின்­ற­னர்.

பாட­சாலை மாண­வர்­கள் விவ­சா­யி­கள் எனப் பல­ரும் இந்த வீதி­யைக்பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். ஆனால் இந்த வீதி மழை காலத்­தில் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

எனவே உரி­ய­வர்­கள் இத­னைக் கவ­னத்­தில் எடுத்து வீதி சீர­மைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் எனக் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

You might also like