சு.கவுடன்  எந்தக் கூட்டும் இல்லை -ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு

உள்­ளூ­ராட்­சி­ ச­பைத் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­ஜன  பெர­மு­னக் கட்சி கூட்­ட­ணி­யொன்றை அமைத்து கள­மி­றங்­குமே தவிர ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் கூட்­டணி வைத்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் ஒரு­போ­தும் கூட்­டணி அமைக்­காது.

இவ்­வாறு முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ரும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யின் தலை­வ­ரு­மான ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யில், சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னக் கட்சி ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான பரப்­பு­ரையை அநு­ரா­த­பு­ரத்­தில் நேற்றுமுன்தினம் ஆரம்­பித்­தது.

இதில் கலந்­து­கொண்டு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

“சிறி­லங்கா பொது­ஜன பெர­முன உள்­ளூ­ராட்­சித் தேர்­தலில் போட்­டி­யிட அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் பசில் ராஜ­பக்ச தலை­மை­யில் மேற்­கொண்­டுள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் கூட்­டணி வைத்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் ஒரு­போ­தும் கூட்­டணி வைக்க மாட்­டோம்.சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிடி­யி­லி­ருந்து  எப்போது வில­கு­கின்­றதோ அப்­போ­து­தான் பேசு­வோம். சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னக் கட்­சி­யு­டன் மகிந்­த­வின் யுகத்தை ஏற்­ப­டுத்த அனை­வ­ரும் ஒன்­றி­ணை­வோம்”  – என்­றார்.

You might also like