சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது

சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் சம­மா­னது. அதன் பிடிக்­குள் இருந்து எவ­ரும் தப்­பிக்­கக்­கூ­டாது என்­பதே எனது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். தவறை மூடி­ம­றைப்­ப ­தற்­காக எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­மாட்­டேன். பிணை­முறி ஆணைக்­குழு சமர்ப்­பிக்­கும் அறிக்­கை­யின் பிர­கா­ரம் தரா­த­ரம் ­பா­ராது, குற்­ற­வா­ளி­ க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இவ்­வாறு திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­கி­ரம, மங்­கள சம­ர­வீர, கபீர் ஹாசீம் ஆகி­யோர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்து, பிணை­முறி விவ­கா­ரம் தொடர்­பில் பேசி­ய­போதே அரச தலை­வர் மைத்­திரி இவ்­வாறு இடி த் ­து­ரைத்­துள்­ளார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

‘பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் அரச தலை­வர் ஆணைக்­குழுத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் அழைப் ­பாணை விடுத்­துள்­ளது. தலைமை அமைச்­சர் அங்கு செல்­லும் பட்­சத்­தில் அது அர­சுக்­குப் பெரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்­ப­து­டன் கூட்டு அரசு என்ற உற­வி­லும் தாக்­கத்­தைச் செலுத்­தி­ வி­டும். இது விட­யத்­தில் அரச தலை­வர் தலை­யிட்டு, மாற்­று­ வழி குறித்துச் சிந்­திக்­க­ வேண்­டும்’ என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­களை கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இவற்­றைச் செவி­ம­டுத்த அரச தலை­வர் மைத்­திரி, நல்­லாட்சி என்ற கோட்­பாட்­டுக்கு பிணை­முறி விவ­கா­ரமே சாபக்­கே­டாக அமைந்­தது. கடந்த அர­சில் மோசடி செய்­த­வர்­க­ளெல்­லாம் இதைக்­காட்டி மக்­கள் மத்­தி­யில் தம்மை நியா­யப்­­ படுத்­திக்­கொள்ள முற்­ப­டு­ கின்­ற­னர். அர­சுக்­கும் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள் ­ளது.
சட்­டத்­தின்­ப­டி­தான் எல்­லாம் நடக்­கும்.

பிணை­முறிமோசடி தொடர்­பில் விசா­ரணை நடத்­தும் குழு எனக்கு அறிக்கை கைய­ளிக்­கும். அதன்­பின்­னர் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அர­சி­யல் அந்­தஸ்­துள்­ள­வர்­க­ளைக் காப்­ப­தற்­காக நான் தலை­யீடு செய்­ய­மாட்­டேன். சட்­டம் என்­பது அதற்கே உரிய பாணி­யில் வீறு­ந­டை­ போட வேண்­டும், என்று கூறி­யுள்­ளார்.

You might also like