பியர் விலைக்­கு­றைப்பு யோச­னைக்கு அர­சுக்­குள்­ளும் ïகடும் எதிர்ப்பு

பிய­ருக்­கான வரி­யைக் குறைக்­கும் வரவு  – செல­வுத்­திட்ட யோசனை மீள் பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த யோச­னைக்கு அர­சுக்­குள் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தால், மீள்­ப­ரி­சீ­லனை முடிவை எடுத்­துள்­ள­தாகப் பாது­காப்பு இரா­ஜங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­ வர்­தன தெரி­வித்­தார்.

மல்­வா­னை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்ட பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வரவு செல­வுத்­திட்­டத்­தின்’ முன்­மொ­ழி­வு­கள் வர­வேற்­கத்­தக்­கவை. நாட்­டின் எதிர்­கா­லத்­தினை மைய­மாக வைத்­தும் நாட்­டைக் கடன் சுமை­யி­லி­ருந்து மீட்­டெ­டுக்­கும் வகை­யி­லு­மான திட்­டங்­களே முன்­வைக்­கப்­பட்­டுள்ளன.

நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­ச­வீர மிக நுணுக்­க­மாக அனைத்து விட­யங்­க­ளை­யும் கவ­னத்­தில் கொண்­டுள்­ளார். பிய­ருக்­கான வரிக் குறைப்பு சம்­பந்­த­மாக பல விமர்­ச­ னங்­கள் எழுந்­துள்­ளன.

இந்த முன்­மொ­ழிவை முன்­வைப்­ப­தற்கு முன்­ன­ரான கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. மதுப்­பா­வ­னையை நாட்­டி­லி­ருந்து ஒழிக்­கும் முக­மாக கடந்த இரண்டு தட­வை­கள் மது­வின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டது. இதன் விளை­வாக நாட்­டில் கசிப்பு உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது. இது மிக மோச­மான நிலையை உரு­வாக்­கி­வி­டும்’ என்ற வாதம் கலந்­து­ரை­யா­ட­லில் முன்­வைக்­கப்பட்­டது. அதன்­பின்­னரே முன்­மொ­ழிவு இறுதி செய்­யப்­பட்­டது.

தற்­போது அது குறித்த விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன. அர­சில் உள்­ள­வர்­கள் சில­ரும் அதற்கு எதி­ரான கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ள­னர். இந்த விட­யம் நிச்­ச­ய­மா­கக் கவ­னத்­தில் கொள்­ளப்­ப­டும். பியர் குடி­வ­கைக்­கான வரி­யைக் குறைப்­ப­தன் ஊடாக எதிர்­கால இளம் சமூ­கத்­தி­ன­ரைக் குடிப்­ப­ழக்­கத்­துக்கு ஆளாக்­கு­வது எமது இலக்கு அல்ல.

அவ்­வா­றான கொள்கை எது­வும் அர­சி­டம் இல்லை.  இந்த முன்­மொ­ழிவு தொடர்­பில் அரசு கூடிய கவ­னம் செலுத்­தும்.  முன்­மொ­ழிவு குறித்து மீள்­ப­ரி ­சீ­லனை செய்­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்­களே அதி­கம் உள்­ளன  – –  என்­றார்.

You might also like