புதிய அர­ச­மைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு அடி­மைச் சாச­ன­மாக அமை­கி­றதா?

புதிய அர­ச­மைப்பு மூல­மாக முஸ்­லிம் சமூ­கத்­தி­ன­ரது முது­கில் நிரந்­த­ர­மாக அடி­மைச் சாச­ன­மொன்று எழு­தப்­ப­டும் அபா­யம் இருப்­ப­தனை உணர்­வ­தாக – அஞ்­சு­வ­தாக அமைச்­சர் ரிஷாத் பதி­யு­தீன் தெரி­வித்­தார்.

எழுத்­தா­ளர் எஸ்.யு. கமர்­ஜான் எழு­திய ‘நான் மூச்­ச­யர்ந்த போது’ என்ற கவிதை நூல் வெளி­யீட்டு வத்­தளை ஹூணுப்­பிட்டி சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்­தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்­றது. முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் ரிஷாத் மேற்கண்டவாறு கூறி னார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேர்­தல் முறை மாற்­றம், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம், நிறை­வேற்று அரச தலை­வர் முறை ஒழிப்பு ஆகிய விட­யங்­கள் முஸ்­லிம் சமூ­கத்­தைப் பொறுத்­த­ள­வில் பாதிப்­பா­னவை – ஆபத்­தா­னவை என்றே நாம் கரு­து­ கி­றோம்.
நிறை­வேற்று அரச தலை­வர் முறைமையை மாற்றி சிறு­பான்­மைச் சமூ­கத்­தின் வாக்­கு­க­ளைச் செல்­லாக்­கா­சாக மாற்­று­வ­தற்­கான முயற்சி மிக வேக­மாக நடந்­தேறி வரு­கின்­றது.

கடந்த காலங்­க­ளில் நாடா­ளு­மன்ற முறை­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றங்­கள் போல, மீண்­டும் இந்த முறை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வற்­காகத் தேர்­தல் முறையை மறு­சீ­ர­மைக்க வேண்­டு­மென்று அரசு வரிந்து கட்­டிக் கொண்டு நிற்­கி­றது.

முஸ்­லிம் சமூ­கத்­தி­னது பெரும் பங்­க­ளிப்­பால், பல்­வேறு அர்ப்­ப­ணிப்­பு­க­ளால் நாம் விரும்பி உரு­வாக்­கிய நாட்­டுத் தலை­மை­கள் இவ்­வா­றான புதிய முயற்­சி­களை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தால் நமக்கு வரப்­போ­கும் ஆபத்­துக்­கள் குறித்து நாம் கண்­தி­றந்து பார்க்­கா­மல் கண்­மூ­டித்­த­ன­மா­கவே இருக்­கின்­றோம்.

சிறிய சிறிய பிரச்­சி­னை­க­ளுக்­காக ஊருக்கு ஊர், பிர­தே­சத்­துக்­குப் பிர­தே­சம் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக அடி­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றோ­மே­யொ­ழிய நமக்கு முன்னே வந்து நிற்­கும் ஆபத்­து­கள் தொடர்­பில் எவ்­வித அக்­க­றை­யு­மற்று இருப்­ப­து­தான் வேத­னை­யா­னது.

அறி­வுள்ள, ஆற்­ற­லுள்ள, பண­ப­ல­முள்ள சமூ­க­மாக முஸ்­லிம் சமூ­கம் பார்க்­கப்­ப­டு­கின்ற போதும் இவ்­வா­றான விட­யங்­க­ளில் அலட்­டிக் கொள்­ளா­மல் இருப்­பது துர­திஷ்­ட­மா­னதே.
சிறிய கட்­சி­யின் தலை­வன் என்ற வகை­யி­லும் சிறு­பான்மை சமூ­கத்­தைச் சார்ந்த கட்­சி­யொன்­றின் பொறுப்­பா­ளன் என்ற வகை­யி­லும் நாம் மிக­வும் நொந்து போய் இருந்­தா­லும் இந்த ஆபத்­துக்­களை எவ்­வாறு முறி­ய­டித்து, சமூ­கம் சார் வெற்­றி­க­ளைத் தக்க வைத்­துக் கொள்ள முடி­யும் என்ற அதீத முயற்­சி­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­றோம்.

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராகச் சிங்­கள இளை­ஞர்­க­ளும் தமிழ் இளை­ஞர்­க­ளும் ஆயு­த­மேந்­திய போதும் முஸ்­லிம்­கள் அமை­தி­யா­கவே வாழ்ந்­த­னர். மக்களாட்சி வழி­யையே தேர்ந்­தெ­டுத்­த­னர். நமது அர­சி­யல் முன்­னோ­டி­கள் கற்­றுத்­தந்த வழி­மு­றை­ க­ளைப் பின்­பற்­றியே ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் எப்­போ­தும் ஒத்­து­ழைத்து வருகின்றோம். இந்த யதார்த்­தத்­ததை அனை­வ­ரும் புரிந்து கொள்ள வேண்­டும்.

தமிழ்ச் சகோ­த­ரர்­கள் மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக அர­சி­யல் தீர்வு ஒன்­றைத் தேடி நிற்­கும் பின்­ன­ணி ­யி­லும், அந்­தக் கோரிக்­கையை எவ்­வாறு நிறை­வேற்­று­வ­தென்ற ஆழ­மான சிந்­த­னை­யில் அரசு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. இந்­த­நி­லை­யில் முஸ்­லிம்­க­ளின் சவால்­களை வென்­றெ­டுக்க வேண்­டிய நிலை நமக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கல்வி, பொரு­ளா­தார, வாழ்­வா­தார மற்­றும் மீள்­கு­டி­ய­மர்­வுப் பிரச்­சி­னை­ க­ளைத் தீர்க்­கும் நோக்­கில் எமது கட்சி பல கட்­ட­மைப்­புக்­களை வைத்­துக்­கொண்டு நேர்­மை­யு­டன் செயற்­ப­டு­கி­றது. இந்­தப் பய­ணத்­தைத் தடுப்­ப­தற்­காகப் பல முனை­க­ளி­லும் அம்­பு­கள் எய்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. சமு­தா­யம் சார்ந்­த­வர்­க­ளின் அம்­பு­க­ளும் சிங்­க­ளப் பேரி­ன­வா­தி­க­ளின் அம்­பு­க­ளும், தமிழ்ப் பேரி­ன­வா­தி­க­ளின் அம்­பு­க­ளும் வெவ்­வேறு வடி­வங்­க­ளில் பல்­வேறு கோணங்­க­ளி­லி­ருந்து நமக்கு எறி­யப்­பட்ட போதும் இறை­வ­னின் உத­வி­யால் அவற்­றை­யெல்­லாம் முறி­ய­டித்­துக் கொண்டு முன்­னே­றும் சக்­தியை இறை­வன் தந்­துள்­ளான்.

சமூ­கத்­துக்கு நேர்ந்­துள்ள ஆபத்­து­களை வெளி­யில் பேசி­னால் ‘ஆட்­சியை தொலைக்­கப்­பார்க்­கி­றார்’, ‘முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் ஒப்­பந்­தம் மேற்­கொண்டு விட்­டார்’, ‘நல்­லாட்­சியை வீட்­டுக்கு அனுப்­பத் துடிக்­கின்­றார்’ என்­றெல்­லாம் கதை­ய­ளந்து எமது குரல்­வ­ளையை நசுக்­கு­வ­தற்கு எத்­த­னிக்­கின்­ற­னர்.

அர­சி­யல் சூனி­யம் கொண்ட, கட்­சி­வெ­றி­பி­டித்த சின்­னங்­களை மதங்­க­ளா­கப் பார்க்­கும் நம்­ம­வர்­க­ளில் சிலர் இவ்­வாறு எறி­க­ணை­களை வீசு­கின்­ற­போ­தும் அவற்­றை­யெல்­லாம் தாங்­கிக் கொண்­டும் தடை­க­ளைத் தாண்­டிக் கொண்­டும் நேர்­மை­யா­கப் பய­ணிக்­கின்­றோம் -– என்­றார்.

You might also like